நான்கு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இன் னும் 3 கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால் மூன்றாவது முறையாக எப்படியும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக இருக்கும் பாஜகவுக்கு ஜூன் - 4இல் நல்லகாலம் பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதனால் பாஜகவின் இரண்டாம் நிலை தலை வர்கள் மட்டுமல்லாது பிரதமர் மோடியே தரம் தாழ்ந்த விமர்சனங்களுடன் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்.
தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றிய கவலை எதும் இல்லாமல் அதைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு மதம், சமூகம், கோவில் எனப் பலவாறாக மோடி முதலானவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் தேர்தல் ஆணையம் அவர்கள் மீதான புகார்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அதனால் தோல்வி பயம் துரத்துவதால் தாறுமாறாகப் பேசுவதையும் கடவுளையும் மதத்தையும், எதிர்க்கட்சித் தலைவர்கள் இழி வாகக் கருதுகிறார்கள் என்று இந்து வாக்கா ளர்களை திசை திருப்பி உசுப்பிவிடும் வேலை யில் இறங்கியிருக்கிறார்கள். அதன்மூலம் தங்களை மட்டுமல்ல, நாட்டின் அரசியல் தரத்தையும் கண்ணியத்தையும் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பு ராமர்கோவிலுக்கு ராகுல் காந்தி வர வில்லை என்று மோடி குறை கூறினார். இப்போது அமித்ஷாவும் அப்படிப் பேசுகிறார். உ.பி.முதல் வர் ஆதித்யநாத்தோ, இன்னும் ஒருபடி மேலே போய் அல்லது தரை லோக்கல் அளவுக்குத் கீழி றங்கி, எங்கள் அன்புக்குரிய கடவுள் ராமரும் தனது தீவிர பக்தர் (மோடி) மீண்டும் ஆட்சி யமைக்க விரும்புகிறார் என்று கூறியிருக்கிறார்.
தங்களது பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக் கிறோம்; எங்கள் ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் மேலும் என்னென்ன நலத்திட்டங்களை நிறை வேற்றுவோம் என்று கூறி வாக்குக் கேட்பதற்கு வகையில்லாததால், இப்போது ராமரை இழுத்து வருகிறார்கள். தேர்வு எழுதும் மாணவன் நன்றா கப் படித்து எழுதுவதற்குப் பதிலாக இஷ்டதெய்வத் திடம் வேண்டிக் கொள்வது போலிருக்கிறது பாஜக தலைவர்களின் இந்தச் செயல்பாடுகள்.
அரசியல் பிரச்சாரத்தில் மதத்தை கலக்கக் கூடாது என்பதைமீறி பிரதமர் மோடி குருத்வாரா செல்கிறார். அங்கு உணவு தயாரித்து பக்தர்களுக்கு வழங்குகிறார். சீக்கியத் தலைப் பாகை அணிகிறார். அதை எக்ஸ் தளத்தில் பிரச் சாரம் செய்கிறார். அவரது கட்சித் தலைவர்களும் அதையே பிரச்சாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துரோகம் செய்ததும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு அநீதி இழைத்ததும் உத்தரவாதங்களை நிறைவேற்றாததும் இந்தத் தேர்தலில் பாஜகவையும் மோடி கூட்டத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தங்களின் கடைசி ஆயுதமாகவும் புகலிட மாகவும் ராமரை சரணடைந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களது பத்தாண்டு கால பாதக ஆட் சியில் படாதபாடுபட்ட மக்கள் மீண்டும் ஆட்சி வரம் தர மாட்டார்கள்; மக்களின் சாபம் நிச்சயம்!