headlines

img

இருள் சூழ்ந்த எட்டு ஆண்டுகள்

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்று எட்டு ஆண்டுகளை எட்டிப் பிடித்துள்ளது. எதிர்கால இந்திய வரலாறு எழுதப்படும்போது பிரதமர் மோடியின் ஆட்சிக் காலம் இந்தியாவின் இருண்ட காலம் என்றே எழுதப்படும். ஏனெனில் அனைத்துத் துறைக ளிலும் நாட்டை பின்னோக்கி இழுத்துச் சென்ற காலமாக இவரது ஆட்சிக் காலம் அமைந்துள் ளது.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலம் அனைத்துத் துறையிலும் மின்னுவ தாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலமாகவே பிரதமர் வேட்பாளராக இவரை முன்னிறுத்தியது ஆர்எஸ்எஸ் பரிவாரம். 

இந்தியா விடுதலை பெற்றபிறகு மிக மோச மான முறையில் மதரீதியான வன்செயல்கள் குஜராத்தில் இவரது ஆட்சிக்காலத்தில்தான் அரங்கேறின. ஆனால் அதை திட்டமிட்டு மறைத்து வளர்ச்சியின் நாயகனாக அவரை முன்னிலைப்படுத்தினர்.

ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை,  வேளாண் விளை பொருள்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை, கருப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவரு டைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் முதலீடு என ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சியை பிடித்தது பாஜக.

ஆனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலை நடை முறைப்படுத்தவும், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கரசேவை செய்வ திலும் முனைப்பு காட்டியதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சி என்பது இந்தியாவை நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளன.

அரசியல் சாசன அமைப்புகளான நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்பு கள் என அனைத்தும் ஆட்சியாளர்களின் தலை யாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்டுள்ளது. இத னால்தான் மனதின் குரல் நிகழ்ச்சிகளில் தலை யாட்டிப் பொம்மைகளை புகழ்ந்துரைக்கிறார் பிரதமர் மோடி.

நிலவுரிமையாளரின் ஒப்புதல் இல்லாம லேயே நிலத்தை பறிக்கும் சட்டம், வேளாண் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமையை தீர்மானிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் என மோடி அரசு கொண்டு வந்த சில சட்டங்களை நிறுத்தி வைத்திருந்தபோதும் ஏராளமான, ஜன நாயக விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றி சொந்த நாட்டு மக்களை வதைத்து வரும் ஆட்சி இது.

ஊடகங்களின் மூலம் வெற்றுப் பிம்பத்தை உருவாக்கி பிரதமர் மோடி போடும் வாய்ப்பந்த லால் இந்திய மக்கள் இளைப்பாற முடியவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த ஆட்சியை அகற்றுவதன்மூலமே இந்தியாவை பாதுகாக்க முடியும்.