headlines

img

ரூ.50 ஆயிரம் கோடி...!?

‘‘அம்மா இருந்த சமயத்தில் தேர்தல்

வேலைக்காக 10 ரூபாய் பணம் கொடுத்தாலும்

அது கட்சியில் கடை மட்டத்தில் இருப்பவர்க

ளுக்கு போய்ச் சேர வேண்டுமென்றால் சேரும். அதுதான் அம்மாவின் வெற்றியின் ரகசியம். இந்த முறையும் அம்மா காட்டிய வழியில் நான்

பயணிக்க விரும்புகிறேன்... நேற்று வேட்பாளர் அறிவிச்சதுமே ஒருத்தர் என்கிட்ட வந்து எப்போ

பணம் வருமுன்னு கேட்டாரு. அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் தொகுதி

செலவுக்கான பணம் எந்த நேரத்தில் எப்படி வரவேண்டுமோ அப்படி உங்களுக்கு வந்து சேரும்... ’’ 

- வேட்பாளர்களை அறிவித்த கையோடு திங்களன்று மதியம் அதிமுக மாவட்டச் செய

லாளர்கள் கூட்டத்தை நடத்தி, அதில்

இப்படி பேசி கட்சிக்காரர்களை ‘உற்சாகப்படுத்

தியிருக்கிறார்’ அக்கட்சியின் இணை ஒருங்கி

ணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அவரது பேச்சு இணைய ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. 

அதே வேளையில், மக்களவைத் தேர்தலில்

மிக அதிகம் பணம் செலவிடப்படும் தொகுதி

களாக தமிழகத்தின் 39 தொகுதிகளையும் தேர்தல் ஆணையம் கண்டறிந்திருப்பதாக

அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. நாடு

முழுவதும் அதிகப் பணம் புழங்கும் தொகுதிகளாக

மொத்தமே 110 தொகுதிகளைத்தான் கணித்தி

ருக்கிறார்கள்; அதில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்த அவமானத்தையும், அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதையும் இணைத்துப் பார்த்தாலே போதும், தமிழக

மக்களவைத் தேர்தல் களத்தை பணப்பெட்டி

களால் நிரப்புவதற்கு ஆளும் கட்சி தயாராகி

விட்டது என்பதை உணர முடியும்.

ஏனென்றால், மக்களிடம் தலைநிமிர்ந்து கம்பீரமாக சொல்வதற்கு அதிமுகவிடமும் சரக்கு இல்லை; அவர்களோடு கைகோர்த்துள்ள பாஜகவிடமும் ஒன்றுமில்லை; பாமகவிடமும் ஏதுமில்லை. குறிப்பாக மத்திய, மாநில ஆளும்

கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் இந்த 

காலம் முழுவதும் மக்கள் விரோத கொள்கைக

ளை அமலாக்கியது மட்டுமல்ல; ஊழலின் உச்சத்தில் திளைத்திருக்கின்றன.

மத்தியில் ரபேல் ஊழலில் துவங்கி, மாநி

லத்தில் வாய்க்கால் தூர்வாரியதாக கூறி மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது வரை பல்லாயிரம் கோடிகளை ஆளும் கட்சியினர் சூறையாடிய கணக்கு வழக்குகள் மக்கள் மன்றத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. 

நாடு முழுவதும் இந்தத் தேர்தலில் ரகசியமா

கவோ அல்லது சட்ட விரோதமாகவோ ரூ.50

ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட

லாம் என்று ஊடக ஆய்வு மையம் கணித்திருக்கி

றது. மத்தியில் பாஜக, தமிழகத்தில் அதிமுக ஆகிய இரண்டும் இந்த கோடிகளை நம்பி வாக்கா

ளர்களை சந்திக்க இருக்கின்றன. ரகசியமாக அல்ல, பகிரங்கமாகவே அவர்கள் இந்த வேலை

யைச் செய்ய இருக்கிறார்கள். சட்ட விரோத ஆட்சி நடத்துபவர்கள் சட்ட விரோத பாதை

யிலேயே வருகிறார்கள். அவர்களை வீழ்த்தி சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தட்டும் மக்கள்!