headlines

img

அல்லவை தவிர்த்து நல்லவை சிறக்கட்டும்!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் திமுக மக்களுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதி கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னமும் நிறை வேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகளும் உள்ளன.  இவற்றை விரைந்து நிறைவேற்ற அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்ச ரவை பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் கொ ரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரண மாக ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டி ருந்தன. அரசு பொறுப்பேற்றவுடன் கொரோனா தொற்றை சமாளிக்கவும், ஆக்சிஜன் உள்ளிட்ட மருந்து பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்கவும் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப் பட்டது. இது பெருமளவு பயனளித்தது. 

ஒன்றிய அரசின் ஓர வஞ்சனையையும் மீறி தடுப்பூசி போடுவதிலும் சாதனை நிகழ்த்தியது. இதனால் கொரோனா அச்சத்தில் இருந்து தமிழ கம் மீட்கப்பட்டது. 

அரசு பொறுப்பேற்றவுடனேயே கொரோனா கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம், பெண்களுக் கும், திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணம், பெட்ரோலுக்கான வரி குறைப்பு, பால் விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்றது என பல்வேறு சாதகமான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன.  

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது என பல்வேறு அறி விப்புகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். 

குறிப்பாக மாநில உரிமைகளை பாதுகாப்ப தில் திமுக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா வை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் சட்டப் பேர வையைக் கூட்டி மீண்டும் மசோதாவை நிறை வேற்றி அனுப்பி வைத்தது, ஒன்றிய அரசின் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு, தமிழகத் திற்கென்று தனி கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைப்பு, கீழடி உள்ளிட்ட இடங்களில் மாநில தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகள்  என பல்வேறு வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் அமைய வேண்டுமென முதல்வர் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறார். அதேநேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு லட்சக்கணக்கானோர் காத்திருக் கின்றனர். நீதிமன்ற உத்தரவு தடையாக இருக்கு மானால், மேல்முறையீடு செய்து மக்களுக்கு பட்டா கிடைக்க வகை செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் நடைபெற்ற காவல்நிலைய அத்து மீறல்கள் ஆங்காங்கு தலைகாட்டும் நிலையில் முற் றாக தடுக்கப்பட வேண்டும். மிகுந்த நம்பிக்கை யோடு ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் ஏற்படுத்தி யுள்ளனர். அந்த நம்பிக்கை பாதுகாக்கப்படவேண்டும்.

;