குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் வரவேற்று பாராட்டியுள்ளன. மதச்சார் பற்ற ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தை யும் பாதுகாக்கும் வகையில் கேரள மாநில அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல் பட்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தமிழ கம், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தநிலையில் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமா னது என்று அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியிருக்கிறார். மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மத்திய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு மாநில அரசுகள் கட்டுப் பட்டே ஆகவேண்டும் என்று மிரட்டும் தொனி யில் பேசியிருக்கிறார். கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் செயல்படுவது மத்திய அரசு தானே தவிர மாநிலங்கள் அல்ல.
குடியுரிமை திருத்தச் சட்டம் மட்டுமல்ல, கடந் தாண்டில் மோடி தலைமையிலான பாஜக அரசு தனது அரசியல் மற்றும் அடக்குமுறை நோக்கங்க ளுக்காகவும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கை களை நிறைவேற்றுவதற்காகவும் சட்ட விரோத மான அம்சங்களை சட்டத் திருத்தம் என்கிற பெய ரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தம், முத்தலாக் சட்டம், தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டம், தேசிய மருத்துவ கவுன்சில் சட்டம், தொழிலாளர் சட்டத்திருத்தங்கள், அணைகள் பாதுகாப்பு சட்டம், மோட்டார் வாகன சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை உருவாக்குவ தையும், திருத்தங்கள் செய்வதையும் உரிய விவா தங்கள் இன்றி அவசர, அவசரமாக நிறை வேற்றியிருக்கிறது.
இந்த சட்டத் திருத்தங்கள் அனைத்தும் தனது அரசியல் மற்றும் சித்தாந்த எதிரிகளை சட்ட விரோதமாக ஒடுக்குவதை நியாயப்படுத்துவதற் கும், தொழிலாளர் உரிமைகள் மறுப்பு, சிறுபான்மை யினர் மீதான தாக்குதல், பொது மருத்துவத்தை சீர்குலைப்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடையில்லாக் கொள்ளைக்கு வழி செய்வது என்கிற நோக்கத்திலிருந்தே கொண்டு வரப்பட்டவை. பொதுவாக சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி னால் நிலைக்குழுவுக்கும், தெரிவுக்குழுவுக்கும் அனுப்பிய பிறகு தான் நிறைவேற்றப்படும். அந்த குறைந்தபட்ச ஜனநாயகத்தை கூட மதிக்கத்தெரி யாத அரசுதான் மத்தியில் உள்ளது. இதன் தொடர்ச்சியே குடியுரிமை திருத்தச்சட்டம்.
இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எழுந்துள்ள மகத்தான எழுச்சி இரண்டாவது சுதந்திரப்போராட்டம் போல மாறியுள்ளது.எனவே கேரள சட்டப்பேரவை தீர்மானத்தை உதா சீனப்படுத்தாமல் தனது தவறினை உணர்ந்து மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறவேண்டும். இல்லையெனில் மக்கள் எழுச்சி அதை செய்ய வைக்கும்.