headlines

img

சூதாட்டத்தை ஆதரிக்கும் குறுக்குப் புத்திக்காரர்கள்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறை வேற்றி அனுப்பிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்டார். எனினும் இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளு நரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். ஆனால் விரி வான விவாதங்களுக்குப் பிறகு, ஒரு குழு அமைத்து அந்தக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை எவ்வித காரணமும் கூறாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். முன்னதாக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதியை நேரில் அழைத்து ஆளுநர் விளக்கம் கேட்க, ஆளுநரின் அனைத்து சந்தேகங் களுக்கும் விடையளிக்கப்பட்டதாக சட்ட அமைச்சர் கூறினார். எனினும் ஆளுநர் மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததால் அவசர சட்ட மும் காலாவதி ஆகிவிட்டது. 

இதனிடையே ஆன்லைன் ரம்மி நிறுவனத்தின ரோடு ஆளுநர் நடத்திய சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆளுநருக்கு எந்தக் கவலையும் இல்லை.  ஆன்லைன் ரம்மி  மூலம் சில சூதாட்ட நிறுவனங்கள் கொள்ளையடிப் பதும், இதன்மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் வருவாயும்தான் அவருக்கு முக்கியமாக படுகிறது. 

இதனிடையே பாஜக தலைவர் எச்.ராஜா, ஆளுநர் மாளிகையின் செய்தித்தொடர்பாளராக மாறி ஆன்லைன் ரம்மியை தடைசெய்வது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசு களுக்கு இல்லை என்றும் ஒன்றிய அரசுதான் இதற்குரிய சட்டத்தை இயற்ற முடியும் என்றும் கூறி யுள்ளார்.  பல சமயங்களில் ஆளுநர் பாஜககாரர்கள் போலவே பேசுகிறார். அல்லது பாஜககாரர்கள் அனைவரும் தங்களை ஆளுநர்களாகவே நினைத்து கொண்டு பேசுகின்றனர். 

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடுக்க சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசு களுக்கு உண்டு என்று அரசியல் சட்ட நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இத்தகைய அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்றால் அவசர  சட்டத்திற்கு ஆளுநர் எப்படி ஒப்புதல் அளித்தார்?

ஒரு வாதத்திற்காக ஒன்றிய அரசுதான் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்வதற்கான சட்டத்தை இயற்ற முடியும் என்றால், எச்.ராஜா வின் பாஜகதானே ஒன்றிய ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறது. சட்ட நிபுணர் எச்.ராஜா தனது கட்சியிடம் சொல்லி ஒன்றிய அரசை இதற்கான சட்டத்தை இயற்றச் சொல்ல வேண்டியதுதானே. எது தடுக் கிறது? ஆன்லைன் சூதாட்டம் நல்லது என்பதற் கான ஒரு வாதத்தை கூட இவர்களால் வைக்க முடி யாது. மக்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன, எத்தனைபேர் தற்கொலை செய்துகொண்டு இறந்தால் என்ன, எத்தனை குடும்பங்கள் நடுத்தெரு வில் நின்றால் என்ன, பாஜகவின் பாசம் எல்லாம் சூதாட்டக் கம்பெனிகள் மீதுதான் என்பது தெளி வாகத் தெரிகிறது.

;