நவீன கொள்ளையர்களின் ‘உச்சநேர’ சுரண்டல்
முதலாளித்துவ பொருளாதாரத்தின் இன் றைய கொடூரமான முகத்தை வெளிப்படுத்தும் சிறந்த உள்ளூர் உதாரணம் செயலி வழி வாடகை வாகன நிறுவனங்களின் உச்சநேர கூடுதல் கட்ட ணக் கொள்ளைதான். ஓலா, உபர் போன்ற நிறு வனங்கள் மக்களின் அடிப்படை போக்குவரத்து தேவையை வணிகமயமாக்கி, அவர்களின் அவச ரத்தையும் கட்டாயத்தையும் பணமாக்கும் புதிய உத்தியை கையாளத் துவங்கியுள்ளன.
சர்ஜ் பிரைசிங் என்ற பெயரில் நடைபெறும் இந்த சுரண்டல் முறையில் மக்கள் வாடகை வாகனத்தை அதிகம் நாடும் நேரங்களில், அதா வது மழைக்காலம், அலுவலக நேரம், பண்டிகை காலங்கள், அவசரகால மருத்துவ சேவை போன்ற தருணங்களில் கட்டணத்தை இருமடங்கு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்திவிடுவது. இதற்கு அவர்கள் கூறும் நியாயம் வழக்கமான சந்தை பொருளாதார கோட்பாடு - கேட்பவர் அதிகம், சப்ளை குறைவு, எனவே விலை அதிகம்.
சென்னை உட்பட நகர்ப்புற வாழ்வில், பொதுப் போக்குவரத்து போதுமானதாக இல்லாத சூழலில், வாடகை வாகனங்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறியிருக்கின்றன. இந்த கட்டாய நிலையை இந்த கார்ப்பரேட் செயலி நிறுவனங் கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
மழை பெய்யும் நாளில் வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்து மனிதர், சாதாரணமாக நூறு ரூபாய் வாடகையில் செல்லக்கூடிய இடத்திற்கு முந்நூறு ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படு கிறார். இது ஒரு உதாரணம் மட்டுமே.
இந்த கொள்ளை அமைப்பில் மிகவும் அவல மான விஷயம் என்னவென்றால், ஓட்டுநர்களின் நலன் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனங்களின் போலித்தனம். உண்மையில் இந்த கூடுதல் கட்டணத்தில் பெரும்பகுதி நிறுவ னத்தின் கமிஷன் வருவாயாகவே போய்விடு கிறது. ஓட்டுநர்களுக்கு கிடைப்பது வெறும் சில்லு கள் மட்டுமே. மேலும், இந்த நிறுவனங்கள் தங்கள் ஓட்டுநர்களை ஊழியர்களாக கருதாமல், ஒப்பந்த தொழிலாளர்களாக நடத்துவதன் மூலம் அவர்க ளுக்கு தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு போன்ற எந்த சலுகையும் வழங்குவதில்லை.
அரசாங்கத்தின் தலையிடா அணுகுமுறை இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. செயலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் மக்களின் நலனுக்கு எதிரானது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு வாடகை வாகன கட்டணத்தை அரசு கட்டுப்படுத்துவதுதான். உச்ச நேர கூடுதல் கட்டணத்தை முழுவதுமாக தடை செய்யவும், நிலையான கட்டண முறையை அமல் படுத்தவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தி மக்களுக்கு மாற்று வழிகளை வழங்க வேண்டும்.