headlines

img

கேரளத்தின் பிடல் காஸ்ட்ரோ

 கேரளத்தின்   பிடல் காஸ்ட்ரோ

ஜூலை 21, 2025 - இந்திய கம்யூனிச இயக்கத் தின் வரலாற்றில் கருப்பு நாளாக பதிவாகும் நாட் ளில் ஒன்று. கேரளத்தின் பிடல் காஸ்ட்ரோ என சீத்தாராம் யெச்சூரியால் கொண்டாடப் பட்ட மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். 101 ஆண்டுகள் என்ற நீண்ட வாழ்க்கையில், ஏழைகளின் குரலாகவும், அடக்கப்பட்டவர்க ளின் நம்பிக்கையாகவும், சூரியன் போல் சுடர் விட்டு ஒளிர்ந்த அந்த மாபெரும் மனிதர், இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் அழியாத இடம் பிடித்துள்ளார்.

1923 அக்டோபர் 20 அன்று திருவிதாங்கூர் அரசின் புன்னப்புராவில் பிறந்த வெலிக்ககாத்து சங்கரன் அச்சுதானந்தன், வறுமையின் கொடு மையை சிறுவயதிலேயே அனுபவித்தார். நான்கு வயதில் தாயையும், பதினொரு வயதில் தந்தை யையும் இழந்த அந்த சிறுவன் ஏழாம் வகுப்பிற்குப் பிறகு கல்வியை நிறுத்தி, தன் அண்ணனின் தையல் கடையிலும் பின்னர் நார்பட்டை தொழிற் சாலையிலும் உழைத்தார். ஆனால் அந்த வறுமை அவரை வீழ்த்தவில்லை; மாறாக, அது அவரை மக்களின் துன்பங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு தலைவராக மாற்றியது.

1938-இல் மாநில காங்கிரசில் சேர்ந்த அவர், 1940-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந் தார். மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பி.கிருஷ்ண பிள்ளையின் வழிகாட்டுதலில், அவர் ஒரு தொழி லாளர் தலைவராக வளர்ந்தார். பணக்காரர்க ளின் நெஞ்சுக்கு நடுக்கமூட்டிய அவரது பெயர், ஏழைகளின் இதயத்தில் நம்பிக்கையின் சின்ன மாக நின்றது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மூணா றில் அத்துமீறல்களுக்கெதிரான அவரது போராட் டமும், லாட்டரி மாஃபியாவுக்கு எதிரான அவரது நடவடிக்கையும், ஊழல்களுக்கு எதிரான அவரது அசைக்க முடியாத நிலைப்பாடும் கேரள அரசிய லின் ஜொலிக்கும் வரலாறாக நிற்கின்றன. எதிர்க் கட்சித் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றிய அவர், அதிகாரத்தில் இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் மக்களுக்காகப் போரா டுவதையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்திய அரசியலில் நேர்மையின் சின்னமா கத் திகழ்ந்த அவர், முதிய வயதிலும் கூட காலை நடைப் பயிற்சியையும் யோகாசனங்களையும் தவறவிடாமல் செய்து, நூறு வயதைக் கடந்த முதல் கேரள முதலமைச்சர் என்ற பெருமை யைப் பெற்றார். 

கேரளத்தின் காஸ்ட்ரோ, இந்திய கம்யூனி சத்தின் முகவரி, ஏழைகளின் நாயகன் வி.எஸ். அச்சுதானந்தன், நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது போராட்ட வாழ்க்கை இன்றைய இளம் தலைமுறைக்கு வழி காட்டியாக நிற்கும். அவருக்கு தீக்கதிர் நாளிதழ் புரட்சிகர செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறது.