games

img

தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19-வது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஹாக்கி பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இறுதி வரை போராடிய ஜப்பான் அணி வெள்ளிப்பதக்கமும், சீனாவை வீழ்த்திய தென் கொரிய அணி வெண்கலப்பதக்கமும் வென்றது.