games

img

ஆசிய பேட்மிண்டன் போட்டி: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து  

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனையை எதிர்கொண்டு பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சிங்கப்பூரின் யு யான் ஜாஸ்லினை எதிர்கொண்டார். மொத்தம் 42 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் 21-16,21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.  

இதையடுத்து, பி.வி.சிந்து காலிறுதியில் ஹீ பிங்ஜியாவோவை எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;