24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஃபிரீஸ்டைல் ஸ்கியிங் பிரிவில் உக்ரைன் வீரர் ஒலெக்சான்டர் வெள்ளிப்பத க்கம் வென்றார். இதே பிரிவில் ரஷ்யாவின் புரோவ் வெண்கலப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் இரு நாட்டு வீரர்களும் ஆரத் தழுவிக்கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே எல்லை மற்றும் உக்ரைன் நெட்டோ அமைப்பில் சேருவது தொடர்பாக கடந்த 2 வார காலமாக போர் பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், ஒலெக்சான்டர் - புரோவ் அதனை கண்டுகொள்ளாமல் “எங்களுக்குள் சண்டை இல்லை” என விளையாட்டின் மூலம் நட்புறவை வெளிப் படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று டாப் டிரெண்டிங்கில் உள்ளது.
பதக்கப்பட்டியல் (மாலை 4 மணி நிலவரம்)
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
நார்வே 15 8 11 34
ஜெர்மனி 10 7 5 22
அமெரிக்கா 8 8 5 21
சீனா 8 4 2 14
நெதர்லாந்து 7 5 4 16