24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடை பெற்று வருகிறது. 10-வது நாளான திங்களன்று (மாலை 4 மணி நிலவரம்) அமெரிக்கா (பாப்ஸ்லைஹ்), பிரான்ஸ் (ஐஸ் டான்ஸ்) ஆகிய நாடுகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. தொடக்கத்தில் மந்தமாக பதக்கங்கள் குவித்து வந்த பிரான்ஸ் நாடு தற்போது சத்த மில்லாமல் 4 தங்கம், 6 வெள்ளி, 2 வெண் கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் குவித்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சீசன் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வழக்கம் போல மற்ற கண்டங்களை விட ஐரோப்பா நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வரு கிறது. பதக்கப்பட்டியலின் முதல் 10 நாடு களில் 8 நாடுகள் ஐரோப்பா கண்டத்தையும், அமெரிக்கா, சீனா ஆகிய 2 நாடுகள் வேறு கண்டங்களை சேர்ந்தவையாகும்.
பதக்கப்பட்டியல்
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
நார்வே 9 5 7 21
ஜெர்மனி 8 5 1 14
அமெரிக்கா 7 6 2 15
நெதர்லாந்து 6 4 2 12
ஸ்வீடன் 5 3 3 11