games

img

பாராலிம்பிக் தொடர்... ஒரே நாளில் இந்தியாவிற்கு 2 தங்கம்....

மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் ஒலிம்பிக் தொடரான பாராலிம்பிக் தொடரின் 16-வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 11-வது நாளான சனியன்று இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.  

பகத் பிரோம்த் - தங்கம் 
ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் (SL3) இந்தியாவின் பகத் பிரோம்த் தொடக்கம் முதலே சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிக்கு முன்னேறினார். சனியன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனின் டேனியலை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய இந்திய வீரர் பகத் பிரோம்த்தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா பேட்மிண்டனில் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். 

மனோஜூக்கு வெண்கலம்         
ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் (SL3) இந்திய வீரர் மனோஜ் சர்க்கார் ஜப்பான் வீரர் புஜிஹாராவை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார். 

இன்றுடன் நிறைவு 
16-வது சீசன் பாராலிம்பிக் தொடர்ஞாயிறுடன் (செப் 5) நிறைவு பெறுகிறது. நிறைவு நாளில் இந்தியாவிற்கு 4 பதக்க போட்டிகள் (பேட்மிண்டன் மட்டும்) உள்ளன.இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு பாராலிம்பிக் தொடர்நிறைவு பெறும். அடுத்த சில மணிநேரங்களில் சிறப்பு நிகழ்ச்சியுடன் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும். நிறைவுவிழாவில் இந்தியா சார்பில் வட்டு எறிதல் வீரர் வினோத் (?) இந்திய தேசிய கொடியை ஏந்துகிறார்.

;