games

img

விளையாட்டு செய்திகள்

கிரிக்கெட் உலகையே மிரள வைத்த ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம்

ஐபிஎல் தொடரின் 57ஆவது  லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - லக்னோ அணிகள் மோதின. புதனன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட் டத்தில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடி வில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற எளிதான இலக்குடன் களமிறங் கிய ஹைதராபாத் அணி தொடக்க வீரர்களான அபிஷக் சர்மா (இந்தியா) - டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) ஜோடிக்கு அந்த அணி நிர்வாகம் என்ன ஆலோசனை வழங்கியது என்று தெரியவில்லை. இருவரும் லக்னோ அணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிங்கிள் ரன்களை விரும்பாமல் சிக்ஸ்ர், பவுண்டரி மட்டுமே விளாசி வந்த அபிஷக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடியை கழற்ற லக்னோ அணியின் பல்வேறு வியூகம் வகுத்தது. ஆனால் வியூகங்கள் அனைத்தையும் தனது முரட்டுத் தனமான அதிரடியால் கானல் நீரைப் போன்று காணாமல் போக செய்த அபிஷக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி, லக்னோ அணி நிர்ணயித்த 166 ரன்களை வெறும் 9.4 ஓவர்களில் எட்டி கிரிக்கெட் உலகை நடுங்கவைத்துள்ளது. 

குறிப்பாக சேஸிங்கில் வெறும் 58  பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் குவித்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி ஆட்டத்தின் நாயகர்களான டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 85 ரன்களும், அபி ஷக் சர்மா  28 பந்துகளில் 75 ரன்களும் குவித்து மிரட்டினர். 

300 ரன்கள் குவித்து இருப்பார்கள்
நல்வாய்ப்பாக  57ஆவது லீக் ஆட்டத் தில் ஹைதராபாத் அணி டாஸ் வெல்ல வில்லை. இல்லையென்றால் டாஸ் வென்றிருந்தால் அபிஷக் சர்மா - டிரா விஸ் ஹெட் ஜோடி 300 ரன்களை குவி த்து கிரிக்கெட் உலகில் பிரம்மாண்ட சாதனையை படைத்திருப்பார்கள்.

கே.எல். ராகுலை கேள்வி கேட்க கோயங்காவுக்கு உரிமை

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்த பின்பு, லக்னோ அணியின் உரிமையா ளர் சஞ்சீவ் கோயங்கா ஆட்டம் முடிந்த பின்பு, லக்னோ அணியின் கேப்ட னான  கே.எல்.ராகுலை மைதானத்தின் பவுண்டரி எல்லையில் (பொது இடம்) வைத்து படுதோல்வியின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். லக்னோ அணி படுதோல்வி அடைந்தது உண் மை தான். ஆனால் கே.எல். ராகுலை பொது இடத்தில் வைத்து கேள்வி கேட் பதற்கு லக்னோ அணியின் உரிமையா ளர் சஞ்சீவ் கோயங்காவிற்கு உரிமை இல்லை. காரணம் கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டன் அந்தஸ்தில் இருக்கும் மிக முக்கிய மூத்த வீரர் ஆவார். எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக் கூடியவர். தலைசிறந்த விக்கெட் கீப்பரும் கூட. இப்படி இந்திய கிரிக் கெட் உலகில் மிக முக்கியமான அடை யாளமாக உள்ள கே.எல்.ராகுலை சாதாரண தனியார் தொடரான ஐபிஎல் தொடரின் உரிமையாளரான லக்னோ அணியின் உரிமையாளர் எப்படி கே.எல்.ராகுலை திட்டலாம். 

அவருக்கு யார் இவ்வளவு அதிகாரம் வழங்கியது? இந்திய தேசிய அணி உலகக்கோப்பையில் சொதப்பினால் கூட பிசிசிஐ இவ்வாறு நடந்துகொண்ட வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில் சாதாரண உள்ளூர் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு எப்படி இந்திய தேசிய அணியின் முக்கிய அடையாளமாக உள்ள கே.எல்.ராகுலை ஒரு தனியார் அணி உரிமையாளர் அவமதிக்கலாம்? என பல்வேறு கேள்விகளுடன் நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்  சூழலில், லக்னோ அணியின் உரிமையா ளர் சஞ்சீவ் கோயங்காவிற்கு ரசிகர்கள்  கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

;