games

img

விளையாட்டு செய்திகள்

சஞ்சு சாம்சனுக்கு தவறான முடிவு குவியும் கண்டனம்

செவ்வாயன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 56ஆவது  லீக் ஆட்டத்தில் தில்லி - ராஜஸ்தான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே  மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தில்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தில்லி அணி நிர்ணயித்த 222 ரன்களை துரத்தி சென்ற ராஜஸ்தான் அணி, தில்லி அணியின் திடமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கடுமையாக திணறியது. ராஜஸ்தானின் மிடில் ஆர்டர் ஒருபக்கம் சரிந்தாலும், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனி ஒருவராக அதிரடியுடன் வெற்றிக்கு போராடினார். சஞ்சு சாம்சனின் அதிரடி ரன் குவிப்பால் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 86 ரன்கள் எடுத்து இருந்த பொழுது எதிர்பாராத விதமாக தில்லி வீரர் முகேஷ் பந்து வீச்சில் சாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார்.

சிக்ஸரை கேட்ச் என அறிவித்த மூன்றாம் நடுவர்
சஞ்சு சாம்சனுக்கு அறிவித்த தீர்ப்பு தவறானது ஆகும். கேட்ச் பிடித்த சாய் ஹாப் பவுண்டரி எல்லையில் காலடி வைத்தது தெளிவாக தெரிந்தது. ஸ்மார்ட்போனில் கூட இந்த விவகாரம் தவறானது என கருத்துக் கூறப்படும் அளவிற்கு துல்லியமாக தெரிந்தும், மூன்றாம் நடுவரான மைக்கேல் ஹக் (பிரிட்டன்) சஞ்சு சாம்சன்  ஆட்டமிழந்த தாக அறிவித்தார். நடுவரின் தவறான முடிவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து சஞ்சு சாம்சன் கள நடுவர்களிடம் முறை  யிட்டார். ஆனால் கள  நடுவர்கள் மூன்றாம் நடுவர்களின் முடிவில் தலையிட முடி யாது எனக்  கூறிவிட்டனர். 

இதனால் வேறு வழியின்றி சஞ்சு  சாம்சன் அதிருப்தியுடன் பெவிலியன் சென்றார். சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த வுடன் அடுத்த சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை மொத்தமாக சரிய, அந்த அணி  20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை  சந்தித்தது. சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்ட தவறான முடிவால் தான் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது என்பதால், மூன்றாம் நடுவரான மைக்கேல் ஹக்கிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இனி ரன்குவிப்பு அதிகமாக இருக்காது
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பேட்டர்கள் ஆதிக்கம் பிரம்மாண்டமாக உள்ளது. ஒருநாள் ஆட்டத்தைப் போன்று ரன் குவித்து வருகிறார்கள். அதாவது வெறும் 120 பந்துகளில் 250 குவிக்கும் சம்பவங்கள் மிக எளிதாக அரங்கேறி வருகின்றன. 

மேலும் இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களில், 30க்கும் மேற்பட்ட ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் (ஒரு அணி - ஒரு இன்னிங்ஸ்) குவித்துள்ளன. இத்தகைய  செயல்பாடுகளால் பந்துவீச்சாளர்கள் பொம்மை போன்று பெயர் வாங்கினார்கள். எங்களின் இந்த நிலைமைக்கு இம்பாக்ட் பிளேயர் விதி, ஆடுகளத்தின் பரப்பளவு, மைதானத்தின் தன்மை போன்றவைகள் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் சற்று சுதாரித்து  தீவிர பயிற்சியுடன் பந்துவீசி வருவதால் ஐபிஎல்  தொடரில் ரன் குவிப்பு ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. கடைசியாக நடைபெற்ற 12 ஆட்டங்களில் 4 ஆட்டங் களில் மட்டுமே 200க்கும் மேல் ரன் குவிப்பு நிகழ்ந்துள் ளது. மேலும் ஆடுகளத்தின் தன்மை ஓரளவு மாறிவிட்ட தால் இனி வரும் காலங்களில் ரன்குவிப்பு அதிகமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - பெங்களூரு
(58ஆவது ஆட்டம்)

நேரம் : இரவு 7:30 மணி
இடம் : தர்மசாலா, 
இமாச்சலப் பிரதேசம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)

;