games

img

ஒலிம்பிக் மல்யுத்தம்... வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா...

ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா, கஜகஸ்தானின் நியாஜ் தவுலத்தை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங் புனியா முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். 2-வது பாதியிலும் தாக்குதல் பாணி ஆட்டத்தை கையிலெடுத்த பஜ்ரங் புனியா 6-0 என்ற கணக்கில் புள்ளிகளை குவித்து, மொத்தமாக 8 புள்ளிகளை குவித்தார். இறுதியில் பஜ்ரங் புனியா 8-0 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.  

;