மேற்கு ஆசிய நாடான அஜர்பை ஜானின் தலைநகர் பாகுவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இளவேனில் வளரிவன், ரமிதா, ஸ்ரேயா அகர்வால் ஆகியோருடன் களமிறங்கிய இந்திய அணி 90 ஷாட்களில் 944.4 புள்ளிக்கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 12 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி தற்போது பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது, செர்பியா 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. (மாலை 5 மணி நிலவரம்)