games

img

உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்கா ஆதிக்கம்

18-வது உலக தடகள சாம்பி யன்ஷிப் அமெரிக் காவின் ஓரேகான் மாகாணத்தில் நடை பெற்று வருகிறது.  இந்த தொடரில் போட்டியை நடத்தும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசிய, ஐரோப்பா நாடுகள் பதக்கங்களை குவிக்க திணறி வரும் நிலையில், ஆப்பிரிக்க நாடுகள் கடந்த சீசனை விட பதக்க குவிப்பில் சீரிய வேகத்தில் அசத்தி வருகிறது. அதிகம் எதிர்பார்த்த சீன வீரர் - வீராங்கனைகள் சொதப்பலான செயல்பாடை வெளிப்படுத்தி வருவதால் அந்நாடு பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் - 3 பதக்கம்)  உள்ளது. அமெரிக்கா (6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண் கலம்) 14 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. எத்தி யோப்பியா (ஆப்பிரிக்கா) 3 பதக்கங்களுடன்  (2 தங்கம், 1 வெள்ளி) 2-வது இடத்திலும், போலந்து 3 பதக்கங்க ளுடன் (1 தங்கம், 2 வெள்ளி) மூன்றாவது இடத்திலும் உள்ளது. (மாலை 4:30 மணி நிலவரம்)