games

img

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தரவரிசை இல்லாமல் 4:46 மணிநேரம் போராடிய வீரர்கள்

ஆண்டின் கடைசி கிராண் ட்ஸ்லாம் மற்றும் 144 ஆண்டுகால பழமை யான டென்னிஸ் தொடர்களில் ஒன்றான  அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது தொடக்க சுற்று ஆட்டங்கள் (நியூயார்க் - அமெரிக்கா) நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி புதன்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத் தில் தரவரிசையில் இல்லாத வீரர் களான ஜெர்மனியின் ஆல்ட்மையேர், செர்பியாவின் மெட்ஜேடோவிச் மோதி னர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடி அடுத்தடுத்து கேம்களை ருசித்தனர். இதனால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தது. 4:46 மணிநேரம் நீண்ட இந்த  ஆட்டத்தில் ஆல்ட்மையேர் 7-5, 6-7 (3-7), 7-6 (9-7),  6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில்  அபார வெற்றி 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

2ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள்

: ஜுவரேவ் (ஜெர்மனி), பவுல்  (அமெரிக்கா), டி மினார் (ஆஸ்தி ரேலியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பெலிக்ஸ் (கனடா)

ஒசாகா  அபாரம்

2 முறை அமெரிக்க ஓபன் பட்டம் என 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்க னையான நவோமி ஒசாகா (தரவரிசை  - 32) தனது முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத கிரீட் மென்னனை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதிரடிக்கு பெயர் பெற்ற ஒசாகா பார்ம் பிரச்சனை யால் கடந்த 4 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வில்லை. கடைசியாக 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் :

கோகா கவுப் (அமெரிக்கா), வெக்கிச் (குரோஷியா), அலெக்ஸா ண்ட்ராவோ (ரஷ்யா), நஸ்கோவா (செக்குடியரசு)

ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் அஸ்வின்

கிரிக்கெட் உலகின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஐபிஎல் மற்றும் டிஎன்பி எல் (தமிழ்நாடு டி-20 லீக்) தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி யிலிருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூகவலைத்தளத்தில் அஸ்வின் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “இன்று மிகவும் சிறப்பான  நாள்  என்பதால், ஒரு நல்ல தொடக்கத்துடன் இன்றைய நாளை  தொடங்குகிறேன். அனைத்து விதமான முடிவுகளுக்கும் ஒரு நல்ல தொடக்கம் இருக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது போல் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரராக எனது பணி முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், உலகின் பல கிரிக்கெட் லீக் தொடர்களிலும் விளையாடும் நேரம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் எனக்கு  உறுதுணையாக இருந்த பல்வேறு ஐபிஎல் அணிகளுக்கும், பிசிசிஐக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்  மூலம் பல நல்ல நினைவுகளையும், நல்ல  உறவுகளையும் பெற்றுள்ளேன். இனி என்னு டன் எஞ்சிய நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்” என அதில் கூறியுள்ளார்.  ஐபிஎல் தொடரில் 221 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கில் 98 இன்னிங்ஸ் விளையாடி 833 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.