ஐரோப்பா கண்டத்தின் பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டன் நாட்டின் மூத்த வீரர் ஆன்டி முர்ரே உடல்நலக்குறைவு காரணமாக விலகினார். நீண்ட காலத்திற்கு பிறகு ஆன்டி முர்ரேவை எதிர்கொள்ளவிருந்த டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் அதிர்ஷ்ட வாய்ப்பு மூலம் காலிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவில் கிரீஸின் சிட்சிபாஸ், இத்தாலியின் சின்னர், சிலியின் கிறிஸ்டியன் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.