கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் ஜோகோவிச் தவிர முன்னணி வீரர் - வீராங்கனைகள் பலர் பங்கேற்றுள்ள நிலையில், தரவரிசை மற்றும் பட்டம் தொடர்பான எவ்வித பின்புலமும் இல்லாத கத்துக்குட்டி வீரர் - வீராங்கனைகளிடம் முன்னணி நட்சத்திரங்கள் அதிர்ச்சி தோல்வியுடன் வீட்டிற்கு நடையை கட்டி வருகின்றனர். முதல் சுற்றில் பல அதிர்ச்சி தோல்விகள் அரங்கேறிய நிலையில், 2-வது நாளில் தொடர்ந்த முதல் சுற்று ஆட்டங்களில் சில நட்சத்தி ரங்கள் கடுமையாக போராடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நடால் 3 மணிநேர போராட்டம்
முன்னணி வீரரும், ஸ்பெயின் நட்சத்திரமுமான நடால் தரவரிசை பின்புலம் இல்லாத ஆஸ்திரேலியாவின் ரிங்கியிடம் 3 மணிநேரம் போராடி 4-6, 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதிரடிக்கு பெயர் பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் நடாலுக்கே இந்த நிலைமை என்றால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்ள 2,3-ஆம் நிலை வீரர்களின் கதி என்னவென்று போக போக தான் தெரியும்.