games

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...  ரோஜர் பெடரர் காயம் காரணமாக விலகல்...   

பாரீஸ் 
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. 

தற்போது 4-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) முழங்கால் காயம் காரணமாக 4-வது சுற்றிலிருந்து விலகியுள்ளார். இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்றுள்ள பெடரர் 2-வது முறையாக பிரெஞ்சு ஓபனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கினார். ஆனால் முழங்கால் காயம் அதற்கு தடை விதித்து விட்டது. ரோஜர் பெடரர் விலகியதால் இத்தாலி வீரர் பெர்ரட்டினி அதிர்ஷ்ட வாய்ப்புடன் காலிறுதிக்கு முன்னேறினார்.  

;