games

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அசரென்கா அபாரம்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் அதிரடி வீரரும், இங்கிலாந்து நாட்டின் நட்சத்திரமுமான கேமரான் நோரி, தரவரிசையில் இல்லாத செக் குடியரசின் ஜிரியிடம் 7-6 (10-8), 3-6, 6-3. 1-6, 4-6 என்ற செட் கணக்கில் 3:12 மணிநேரம் போராடி வீழ்ந்து வெளியேறினார்.  இதே பிரிவில் கிரீஸின் சிட்சிபாஸ், கனடாவின் பெலிக்ஸ், இத்தாலியின் சின்னர் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். 4-வது சுற்றில் அசரென்கா மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிரடிக்கு பெயர் பெற்ற வீராங்கனையும், 2 முறை ஆஸ்திரேலிய ஓபனில் (2012, 2013) பட்டம் வென்ற பெலாரஸ் நட்சத்திரமுமான அசரென்கா தனது 3-வது சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான மார்ட்டின் கீஸை 1-6, 6-2, 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  

இதே பிரிவில் போலந்தின் ஸ்வியாடெக், அமெரிக்காவின் கவுப் மற்றும் பெகுலா, லாத்வியாவின் ஜலீனா ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். போபண்ணா ஜோடி தோல்வி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டனுடன் ஜோடி சேர்ந்து களமிறங்கினார். இந்த ஜோடி தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் லூகாஸ் - அலெக்ஸாண்டர் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா - எப்டன் ஜோடியை வீழ்த்தியது லூகாஸ் - அலெக்ஸாண்டர் ஜோடி.