games

img

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து மாக்னஸ் கார்ல்சன் விலகல்?  

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க போவதில்லை என மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.  

செஸ் போட்டியின் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 5 முறை பட்டத்தை வென்ற நார்வேயை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன், மிகக் குறுகிய வயதிலேயே கிராண்ட் மாஸ்டரானவர்.

இவர் வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.  

மேலும், தனிப்பட்ட முடிவின் காரணமாகவே போட்டியிலிருந்து விலகுவதாகவும், இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையாக அறிவித்து விட்டதாகவும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

;