games

img

ஹாட் ஸ்டாரை கலக்கும் மகளிர் உலகக்கோப்பை

கிரிக்கெட் விளையாட்டின் நேரடி ஒளி பரப்பில் உலகளவில் பெயர் பெற்றது ஸ்டார் நிறுவனத்தின் ஓடிடி பிரிவான ஹாட் ஸ்டார் டிஸ்னி+ சாந்த தொகை செலுத்தியவர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்டிவிகளில் நேரடியாக காண லாம். ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் ஆட்டங்கள், ஐபிஎல், உல கக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள், கபடி போன்ற விளையாட்டுகள் அதிக பார்வை யாளர்களை கொண்டிருக்கும். முக்கிய மாக ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை ஆட்டங்கள், இந்திய ஆடவர் அணியின் உலகக்கோப்பை ஆட்டங் கள் 1 கோடி பார்வையாளர்களை நெருங் கிய வரலாறு உள்ளது. ஆனால் மகளிர் கிரிக்கெட் தொடர்களுக்கு ஹாட் ஸ்டாரில் போதுமான அளவு மவுசு இல்லாத நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடை பெற்று வரும் டி-20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் சற்று மாற்றம் ஏற் பட்டுள்ளது. தற்போது மகளிர் உலகக் கோப்பையின் ஒவ்வொரு ஆட்டத்தை யும் ஹாட் ஸ்டாரில் 15 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதால் ஹாட் ஸ்டாரிலும் மகளிர் கிரிக்கெட் தொடருக்கான மவுசு எகிறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

பாகிஸ்தான்-மேற்கு இந்தியத் தீவுகள் (16-வது லீக்)
நேரம் : மாலை 6:30 மணி

நியூசிலாந்து - இலங்கை (17-வது லீக்)
நேரம் : இரவு 10:30 மணி

இரண்டு ஆட்டங்களும் போலந்து பார்க்கில் நடைபெறுகிறது.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஹாட் ஸ்டார்