இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட தொடரின் முதலி ரண்டு ஆட்டங்களின் முடி வில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தொடரை கைப் பற்றிய நிலையில், கடைசி டி-20 ஆட்டம் ஞாயிறன்று கொல்கத்தாவில் நடைபெறு கிறது. கடைசி டி-20 ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கி யத்துவம் இல்லாத ஆட்ட மாக இருந்தாலும், நியூசி லாந்து அணியை ஒயிட் வாஷ் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. அதே போல ஆறுதல் வெற்றியுடன் டெஸ்ட் தொடருக்கு அடி யெடுத்து வைக்கும் முனைப் பில் நியூஸிலாந்து அணி கள மிறங்குவதால் கொல்கத்தா டி-20 ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்தியா - நியூஸிலாந்து இடம்: ஈடன் கார்டன், கொல்கத்தா நேரம்: இரவு 7 மணி
- இந்தியா - நியூஸிலாந்து
- இடம்: ஈடன் கார்டன், கொல்கத்தா
- நேரம்: இரவு 7 மணி