games

img

மகளிர் டி-20 உலகக்கோப்பை யாருக்கு? ஆஸி., - தெ.ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

8-வது சீசன் மகளிர் டி-20  உலகக்கோப்பை தென்  ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்  போது இந்த தொடர் இறுதிக்கட் டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அரையிறுதியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணியும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி யை தென் ஆப்பிரிக்க அணியும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும்  இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. 6-வது  முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி யும், முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பி ரிக்காவும் என இரு அணிகளும் கோப்பை மீது குறியாக களமிறங்கு வதால் மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசுத்தொகை

சாம்பியன் பட்டம்: ரூ.8.27 கோடி
இரண்டாம் இடம்:  ரூ.4.13 கோடி

(இதுபோக அரையிறுதி தோல்வி,  லீக் சுற்று தோல்வியை எதிர்கொண்ட அணிக்கும் போதுமான அளவு பரிசுத் தொகைக்கு உண்டு. அரையிறுதியில் தோற்ற இந்திய அணி ரூ.1.73 கோடி பரி சுத்தொகையுடன் நாடு திரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது)

மழை வருமா?

இறுதிப்போட்டி நடைபெறும் கேப்ட வுன் நகரில் ஞாயிறன்று வானி லைப்படி வானம் மேகமூட்டத்து டன் காணப்படும். மாலை நேர  குளிர்ந்த காற்றால் லேசான அள வில் சாரல் மழை பெய்வதற்கான 50% வாய்ப்புள்ளது. போட்டி தடை  படும் அளவிற்கு பெரியளவு கனமழைக்கு வாய்ப்பில்லை.

யாருக்கு சாதகம்?

ஆஸ்திரேலிய அணி 6 முறை சாம்பிய னாக இருந்தாலும் நடப்பு சீசனில்  தென் ஆப்பிரிக்கா அணி அபாயகரமான அணியாக உள்ளது. காரணம் லீக் ஆட்டங்க ளில் பல முன்னணி அணிகளை வெளியேற்றி,  அரையிறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை புரட்டியெடுத்து இறுதிக்கு முன்னேறி யது. இதனால் கடந்த கால வரலாறுகளை மறந்து  தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிராக தனி வியூகம்  அமைத்து விளையாடினால் மட்டுமே ஆஸ்தி ரேலிய அணி சிக்கலின்றி கோப்பையை  வெல்ல முடியும். உள்ளூர் மக்களின்  ஆதரவு, சூப்பர் பார்ம், வீராங்கனை களின் அதிரடி மனப்பாண்மை என  பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால்  தென் ஆப்பிரிக்கா அணிக்கும் கோப்பை வெல்ல சகல வாய்ப்புகள் இருப்பதால் யாருக்கு கோப்பை என திடமாக கருத்து கூற முடியாது.

ஆஸ்திரேலியா -  தென் ஆப்பிரிக்கா

நேரம் : இரவு 6:30 மணி
இடம் : நியூலாண்ட்ஸ் மைதானம், கேப்டவுன்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 
ஹாட் ஸ்டார்