games

img

விளையாட்டு...

எலிமினேட்டர் 2 சுற்றுக்குள் நுழைவது யார்?
குவாலிபையரில் மும்பை - லக்னோ இன்று மோதல்

16-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகிறது. புதனன்று நடைபெறும் குவாலிபையர் ஆட்டத்தில் மும்பை - லக்னோ பலப்பரீட்சை நடத்து கின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எலிமினேட்டர் 2 சுற்றுக்கு தகுதி பெறும். யாருக்கு சாதகம்? இரு அணியின் பலம், பலவீனத்தை ஒப்பிட்டு யாருக்கு வெற்றி என்று உற்றுநோக்கினால் மும்பை அணி எலி மினேட்டர் 2 சுற்றில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கடினமாக போராடி பிளே ஆப் சுற்றுக்குள்  நுழைந்துள்ள அனுபவம் இருப்பதால் மும்பை அணி எளிதில் லக்னோவை வீழ்த்தும். பலமான வீரர்கள் பலர் இருந்தும் கேப்டன்ஷிப் திடமாக இல்லாததால் லக்னோ அணி திணறி வருகிறது. முழுப்பலத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே மும்பையை சமாளித்து லக்னோ அணி எலிமினேட்டர் 2 சுற்றுக்குள் நுழைய முடியும்.

லக்னோ - மும்பை
வெற்றி வாய்ப்பு
60% - 40%
இடம் : சென்னை சேப்பாக்கம் மைதானம், தமிழ்நாடு
நேரம் : இரவு 7:30 மணி

(சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (தொலைக்காட்சி), ஜியோ சினிமா (ஒடிடி))

மெட்ரோ டிக்கெட் : ரசிகர்கள் கவனம்

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டிகளை நேரடியாக காண சேப்பாக்கம் செல்லும் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் இலவச சேவை அறிவித்திருந்தது. தற்போது லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், தனது இலவச சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் மும்பை - லக்னோ ஆட்டத்தை நேரில் காண செல்லும் ரசிகர்கள் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும்.

பிரான்ஸ் நாட்டில் வலுக்கும் தொழிற்சங்கங்களின் போராட்டம்

மின்வெட்டால் பிரெஞ்ச் ஓபன் பாதிக்க வாய்ப்பு

பிரான்ஸ் நாட் டில் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 64 ஆக உயர்த் தும் சட்ட சீர்திருத் தங்களில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டார். சட்ட சீர்திருத்த முடிவு அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், ஓய்வு பெறும் வயதை பழைய நடைமுறையில் கொண்டு வந்தால் மட்டுமே போராட்டம் நிறுத்தம் தொடர்பாக முடிவு எடுப்போம் என தொழிற்சங்கங்கள் அதிரடியாக அறிவித்துவிட்டன.  இந்நிலையில் தொழிற்சங்கங்கள் ஒருபடி மேலே சென்று பிரான்சில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை இருட்டில் மூழ்கடிப்பதாக அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், பார்முலா 1 (மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ்) தொடர்கள் நடைபெறும் இடங்களில் மின்சப்ளை செய்ய மாட்டோம் (சப்ளை வேலைகள்) என பிரான்ஸ் மின் ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், பார்முலா 1 போன்ற உலக வரலாற்று நிகழ்வுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 


 

;