games

img

இந்திய அணியின் அடுத்த ஹாக்கி பயிற்சியாளர் யார்?

15-வது சீசன் உலகக்கோப்பை தோல்வி காரணமாக இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சி யாளர் கிரஹாம் ரெய்ட் (ஆஸ்திரேலியா) தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் ஹாக்கி இந்தியா நிர்வாகம் களமிறங்கியுள்ளது.  இதுதொடர்பாக இன்னும் விண்ணப்ப அறிக்கை வெளியாகாத நிலையில், பாகிஸ்தான் பயிற்சியாளர் சீக்ப்ரைட் ஐக்மான், முன்னாள் இந்திய பயிற்சியாளரும், உயர்செயல்திறன் இயக்குனருமான ரோலண்ட் ஓல்ட் மன்ஸ், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஷேன் மெக்லியோட் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிரடிக்கு பெயர் பெற்ற வரும், 2016-ஆம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்தவரும், சீனியர் இந்திய அணியை 2018-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் காலி றுதிக்கு அழைத்துச் சென்றவரு மான ஹரேந்திராவும் தலைமை பயிற்சி யாளர் பதவிக்கு விண்ணப்பிக்கக் கூடி யவர்களின் பட்டியலில் இணைந்துள் ளார். இன்னும் ஒரு வார காலத்தில் விண்ணப்ப அறிக்கை வெளியிடப் பட்டு, அதன்பின்பு பயிற்சியாளர் தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி இறுதியில் இந்தியாவின் தலை மை பயிற்சியாளர் அறிவிக்கப்படும்.