ஆஸ்திரேலியா - மே.இ.தீவுகள் ஒருநாள் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று தொடங்குகிறது
டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 2 போட்டி களைக்கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவு பெற்ற நிலையில், அடுத்ததாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வெள்ளியன்று தொடங்குகிறது. 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தனது நீண்ட கால பார்ம் பிரச்சனையை நீக்கியது மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகை ஆனந்த கடலில் நனைய வைத்தது. இதனால் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே.இ.தீவுகள் - ஆஸ்திரேலியா
(முதல் ஒருநாள் போட்டி)
இடம் : மெல்போர்ன் மைதானம், ஆஸ்திரேலியா
நேரம் : காலை 9 மணி
சேனல்:ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
பதிலடி கொடுக்குமா இந்தியா? இன்று 2-ஆவது டெஸ்ட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் (ஹைதராபாத்) இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியா சத்தில் வெற்றி பெற்ற நிலை யில், 2-ஆவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தின் முக்கிய தலைநகரான விசாகப்பட்டி னத்தில் வெள்ளியன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும், 2-ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் இங்கி லாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இந்தியா - இங்கிலாந்து
நேரம் : காலை 9:30 மணி (தினசரி)
இடம் : ஒய்எஸ்ஆர் மைதானம்,
விசாகப்பட்டினம், ஆந்திரா
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)
புரோ கபடி 2024 : 10-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் இன்று தொடக்கம்
புரோ கபடி தொடரின் 10-ஆம் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று வந்த 9-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெற்றன. தொடர்ந்து நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் 10-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் வெள்ளியன்று தொடங்குகிறது.
இன்றைய ஆட்டங்கள்
இடம் : தியாகராஜ் மைதானம், தில்லி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை : சந்தா தொகை கட்டி இருந்தால் பார்க்கலாம்)
தில்லி - பெங்கால்
(100-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
குஜராத் - ஹரியானா
(101-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி