games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று நடைபெறும் 42-ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்பிரிக்கா

நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் அசத்த லான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தென் ஆப்பிரிக்க அணி  8 லீக் ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி,  2 தோல்வி என 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி யுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறி விட்டதால் தனது கடைசி லீக் ஆட்டம் (ஆப்கானிஸ்தான்) தென் ஆப்பிரிக்கா அணிக்கு வெறும் சம்பிரதாய ஆட்டம்தான். எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ஆப்கானிஸ்தான்

இளம் அணியான ஆப்கானிஸ்தான் அணி ஜோனாதன் டிராட்-டின் (இங்கிலாந்து) அபார பயிற்சியால் நடப்பு சீசன்  உலகக்கோப்பையில் பிரம்மாண்ட ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி யுள்ள ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றி, 4 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ளது. தனது  கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தினால் 10 புள்ளிகளுடன் இங்கிலாந்து - பாகிஸ்தான் ஆட்டத்தின் முடிவை பொறுத்து ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்க்கலாம். தென் ஆப்பிரிக்க அணியிடம் தோற்றால் நேரடியாக பேக்கேஜ்களுடன் விமான நிலையம் செல்ல வேண்டியிருக்கும்.

புள்ளிப்பட்டியலில் 2-ஆவது இடத்துடன் அரை யிறுதியில் காலடி வைக்கும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி யும், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ரன்ரேட் அடிப்படை யில் முதல்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறும் முனை ப்பில் ஆப்கானிஸ்தான் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத் நேரம் : மதியம் 2:00 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார்  (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)