games

img

ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளருமான ஷேன் வார்னே (52) கோ சமுய் என்ற இடத் தில் உள்ள தனது பண்ணை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.  முதலுதவி மருத்துவ பரிசோத னையில் ஷேன் வார்னே மாரடைப்பு காரண மாக உயிரிழந்ததாக தெரிய வர, குடும்பத் தினரும் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரி ழந்தார் என தெரிவித்தனர். இருப்பினும் ஷேன் வார்னே வேறுபட்டவர் என்ற காரணத் தினால் பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு முழுமையான விசாரணை மேற்கொள்ளப் படும் என தாய்லாந்து அரசு அறிவித்தது.  இந்நிலையில் திங்களன்று ஷேன் வார்னேவின் பிரேதபரிசோதனை முடிவு வெளியாகியது.  அதில், “ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானதுதான். வார்னேவின் மரணத்தில் சந்தேகத் திற்கு உரிய முறையில் எந்த அறிகுறி கள் எதுவும் இல்லை”   என  பிரேதப் பரிசோதனை முடிவை தாய்லாந்து காவல்துறை  வெளியிட்டுள்ளது.  வார்னேவுக்கு ஆஸ்துமா, இதய பிரச்சனைகள் இருந்ததாக அவரது குடும்பத் தினர் கூறியுள்ளனர் என தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அடுத்த 3 வாரத்திற்குள் வார்னேவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.