games

img

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா?

தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வரும் 8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்  ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறி யுள்ள நிலையில், வியாழனன்று நடைபெறும் முதல் அரை யிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள் கிறது. கடந்த உலகக்கோப்பை சீசனின் (2020-ஆம் ஆண்டு) இறுதி ஆட்டத்தில்  இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்து கோப்பையை இழந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நடப்பு சீசனில் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது இந்திய அணி. மீண்டும் ஒரு ஹாட்ரிக் சாதனையுடன் கோப்பையை வெல்லும் நோக்கில் ஆஸ்தி ரேலிய அணியும் களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றி யின் மீது குறியாக களமிறங்குவதால் முதல் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா 
நேரம் : மாலை 6:30 மணி
இடம் : நியூலாண்ட்ஸ், கேப்டவுன்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஹாட் ஸ்டார்

இரு அணிகளும் 
டி-20 உலகக்கோப்பையில்...

இந்தியா - 2020ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிக்கு முன்னேறியதே அதிகபட்ச முன்னேற்றம் ஆகும். ஆஸ்திரேலியா - 2010, 2012, 2014, 2018, 2020 ஆகிய 5 உலகக்கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2016-ஆம் ஆண்டு தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் கோப்பையை இழந்தது.