games

img

மகளிர் சேலஞ்ச் டி20 கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் சாம்பியன்

மகளிர் டி-20 சேலஞ்ச் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெலாசிட்டி அணியை தோற்கடித்து சூப்பர் நோவாஸ் அணி 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  

4ஆவது மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும், தீப்தி சர்மா தலைமையிலான வெலாசிட்டி அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சூப்பர் நோவாஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிகபட்சமாக டாட்டின் 44 பந்துகளில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணியில் அதிகபட்சமாக லாரா வெல்வெட் 65 ரன்கள் குவித்தார். 

20 ஓவர் முடிவில் வெலாசிட்டி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூப்பர் நோவாஸ் அணி 3ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

;