games

img

விளையாட்டு செய்திகள்

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான், இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

9ஆவது சீசன் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று முதல் அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. 

வியாழனன்று காலை  முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் உலகில் வலுவான அணிகளில் ஒன்றான  தென் ஆப்பிரிக்கா டி-20 உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2009, 2014 ஆண்டுகளில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பையில்  அரையிறுதியோடு வெளியேறிய தென் ஆப்பிரிக்க அணி முதன் முறையாக இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அதே போல டி-20 உலகக்கோப்பை வர லாற்றில் முதன்முறையாக அரை யிறுதிக்கு முன்னேறிய வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பி ரிக்க அணியை வீழ்த்தி முதன்முறை யாக அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது.  இரு  அணிகளும் முதல்முறையாக இறு திக்கு முன்னேறும் முனைப்பில் கள மிறங்குவதால் இந்த ஆட்டம் மிக  பர பரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்  படுகிறது.  

இந்தியா - இங்கிலாந்து

அதே போல இரண்டாவது அரை யிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டாவது முறையாக கோப்பை யை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் கோப்பை கனவோடு இறுதிக்கு முன்னேறும் கனவில் இறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டவணையில் கடும் குளறுபடி
இந்திய ரசிகர்களை குழப்பும் கிர்க்பஸ் இணையதளம்

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் வட அமெரிக்கக் கண்டத்தில் (மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா) நடைபெற்று வரு கிறது. கண்டங்களின் நேரம் தொடர்பான விஷ யத்தால் உலகக்கோப்பை டி-20 தொடரில் பல்வேறு குறைபாடு ஏற்பட்டு வருகிறது. 

காரணம் ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா கண்டங் களுக்கும், வட அமெரிக்க கண்டத்திற்கும் பகலிரவு நேரங்கள்  மாறுபடும். அதாவது ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா கண்டங்களில் பகல் நேரம் என்றால் வட அமெரிக்கக் கண்டத்தில் இரவு நேரமாக இருக்கும். அதனால் போட்டி நடை பெறும் நேரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.  

முதலில் வட அமெரிக்க கண்டத்தின் நேரத்தின் அடிப்படையில் அட்டவணை கொடுக்கப் படுகிறது. அடுத்த 12 மணிநேரத்திற்கு பிறகு மற்ற கண்டங்களின் நேரப்படி அட்டவணை தரப்படு கிறது. குறிப்பாக இந்தியாவின் “நம்பர் 1” கிரிக்கெட் செய்தி இணையதளமான கிர்க்பஸ் (cricbuzz) இணையதளம் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரின் நேர மேலாண்மையில் பல்வேறு குழப்பங் களை ஏற்படுத்தியுள்ளது. கிர்க்பஸ் இணையதள தகவலால் எந்த நாளில் எந்த போட்டி நடைபெறுகிறது என்பது புரியாமல் இந்திய ரசிகர்களை குழப்பத்தில் உள்ளனர்.

இன்றைய அரையிறுதி ஆட்டங்கள்

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான்
நேரம் : காலை 6 மணி
இடம் : டிரினினாட், மேற்கு இந்தியத் தீவுகள்

இந்தியா - இங்கிலாந்து
நேரம் : இரவு 8 மணி
இடம் : கயானா, மேற்கு இந்தியத் தீவுகள்

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்(ஒடிடி)

 

;