games

img

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2  போட்டிகளை கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலை யில், 2-வது டெஸ்ட் போட்டி  கிறிஸ்ட்சர்ச் நகரில் வெள்ளியன்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 364 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 293 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 354 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.  426  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு டன் களமிறங்கிய நியூசிலாந்து அணி கடைசி நாளில் 227 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்து வைத்தது. ஆட்ட நாயகனாக ரபாடா (தெ.,ஆ.,) தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது நியூசிலாந்தின் மேட் ஹென்றிக்கு வழங்கப்பட்டது.

சாதனையை தக்கவைப்பு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்கா அணி இதுவரை தோல்வியடைந்த வரலாறு இல்லை. அந்த வரலாற்றுச் சாதனையை தற்போதைய டெஸ்ட் தொடரில் தக்கவைத்துள்ளது.