பார்ம் பிரச்சனையில் தவிக்கும் சிந்து
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒலிம்பிக் பதக்க நாயகியுமான பி.வி. சிந்து, தென் கொரியா வின் அன் சே யங்கிடம் 21-18, 5-21, 9-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரி லிருந்து வெளியேறினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சற்று அதிரடியாக விளையாடிய சிந்து துபாய் தொடரில் பட்டம் வெல்வார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், பெரியளவு சர்வ தேச பின்புலம் இல்லாத தென் கொரிய வீராங்கனையிடம் சிந்து வீழ்ந்திருப்பது சற்று அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது. 4 ஆண்டுகள் ஒன்றும் இல்லை ஒலிம்பிக் பதக்கம் வென்ற காலத்தி லிருந்தே சிந்து முன்பு போல் சூப்பர் பார்மில் விளையாட முடியாமல் கடுமை யாக போராடி வருகிறார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன் வெல்த் தொடரில் எதிர்ப்பு வீராங்கனை கள் அதிகம் இல்லாததால் சிந்து தங்கம், வெண்கலம் வென்றார், அவ்வளவு தான். கடந்த ஆண்டு ஆசிய பேட்மிண்டன் சாம் பியன்ஷிப் தொடரில் (2022 - பிலிப் பைன்ஸ்) சிந்து ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென் றார். ஆனால் நடப்பு சீசன் ஆசிய பேட் மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் மட்டும் வெண் கலம் வென்றுள்ளார். ஒற்றையர் பிரிவில் அதுவும் இல்லாமல் போய்விட்டது. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய பேட் மிண்டன் சாம்பியன்ஷிப் தவிர்த்து மற்ற முக்கிய தொடர்களில் சிந்து பதக்கம் வென்று 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படியே சென்றால் அடுத்து வரும் ஒலிம்பிக் தொடரில் சிந்து பதக்க ரேஸில் முன்னேறுவது மிகவும் சிரமம்தான். என்ன காரணம்? சிந்துவின் திணறலான ஆட்டத்திற்கு மனதளவு பிரச்சனையா? இல்லை காயம் எதுவும் பிரச்சனையா? என இதுவரை வெளிப்படையாக எந்த தகவலும் வெளி யாகவில்லை. ஆனால் கவனச்சிதறல் களால் மிக மோசமாக விளையாடி வரு கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரி கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் -2023
மீண்டும் மாறிய மொஹாலி மைதானம்
239 பந்துகளுக்கு 458 ரன்கள்
வெள்ளியன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதா னத்தில் நடைபெற்றது. லக்னோ - பஞ்சாப் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணி 20 ஒவர்களுக்கு 257 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியும் போராடி 201 ரன்கள் குவிக்க, மொஹாலி மைதானத்தில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 239 பந்துகளுக்கு 458 ரன்கள் குவிக்கப் பட்டுள்ளது. நடப்பு சீசனில் மொஹாலி மைதானம் பேட்டிங், பந்துவீச்சு சரிசம அளவில் எடுபட்டு நன்றாகத்தான் இருந்தது. ஆனால் திடீரென ஏப்ரல் கடைசி வாரத்தில் மொஹாலி மைதானம் வழக்கம் போல பேட்டிங் கிற்கு மாறிவிட்டது.
தமிழ்நாட்டில் இன்று ஐபிஎல் : சென்னை - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் சென்னை அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தனது 9-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று மதியம் 3:30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை - பஞ்சாப்
இடம் : சேப்பாக்கம் மைதானம், சென்னை
நேரம் : மதியம் 3:30 மணி
மும்பை - ராஜஸ்தான்
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி
(சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டத்தை நேரடியாக காண
மைதானத்திற்கு செல்லும் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் இலவச சேவை அளிக்கிறது- தமிழ்நாட்டில் மட்டும்)
(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)
மழையால் பாதிக்க வாய்ப்பு
தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் கடந்த 4 நாட்களாக கோடை மழை புரட்டியெடுத்து வரு கிறது. இந்த கோடை மழை தாக்கம் இன்னும் 2 நாட்கள் நீடிக்கும் என வானிலை அறிக்கை தகவல் உள்ள நிலையில், ஞாயிறன்று வானிலைப்படி சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை நேரங்களில் மழைக்கான வானிலை அறிவிப்பு உள்ளது. இதனால் சென்னை - பஞ்சாப் அணி கள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. (வானிலை : கூகுள் வானிலைதளம் )