games

img

ஐசிசி 2021 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக  ஷாஹீன் அப்ரிடி தேர்வு 

ஐசிசி 2021 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின்  ஷாஹீன் அப்ரிடி தேர்வாகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் அணிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்கள் மற்றும் அணிகள் என அனைத்து விவரங்களையும் வெளியிட்டுக் கௌரவிக்கும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளையும் அதில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களையும் கௌரவிக்கும் விதமாக அந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான (2021) சிறந்த கிரிக்கெட் வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராகப் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தேர்வானார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வாகியுள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டின் சிறந்த வீரராகப் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தேர்வாகியுள்ளார்.  அப்ரிடி 2021-ல் விளையாடிய 36 சர்வதேச ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 6 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்து கவனம் பெற்றார். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்திய அணியைத் தோற்கடிக்க இவருடைய பந்துவீச்சும்  முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

;