games

img

இந்திய கிரிக்கெட் அணியின் 2022 ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியீடு 

இந்திய கிரிக்கெட் அணிக்கு நிகழாண்டு டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

தற்போது தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் தொடா்களில் தென்னாப்பிரிக்காவுடன் ஆடி வருகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என பிசிசிஐ தரப்பில் இந்திய அணிக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

நிகழாண்டு ஜனவரி 3 முதல் 7 வரை வாண்டரா்ஸ் டெஸ்ட், 11 முதல் 15 வரை கேப் டவுனில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் பின் 19, 21, 23-ல் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. அதனைத் தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகளுடன் பிப்ரவரி 6ல் ஆமதாபாத்தில் முதல் ஒருநாள், 9ல் ஜெய்ப்பூரில் இரண்டாவது ஒருநாள், 12ல் கொல்கத்தாவில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களும், 15ல் கட்டாக்கில் முதல் டி20, 18ல் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டி20, 20ல் திருவனந்தபுரத்தில் மூன்றாவது டி20 ஆட்டத்திலும் மேற்கு இந்தியத் தீவுகளுடன் ஆடுகிறது.

அதன் தொடர்ச்சியாக இலங்கையுடன் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை பெங்களுருவில் முதல் டெஸ்ட்டிலும், மார்ச் 5 முதல் 9 வரை மொஹாலியில் இரண்டாவது டெஸ்டிலும், 13ல் மொஹாலியில் முதல் டி20, 15ல் தா்மசாலாவில் இரண்டாவது டி20, 18ல் லக்னோவில் மூன்றாவது டி20 ஆட்டத்திலும் மோதுகிறது.

ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெறும் நிலையில் இரண்டு மாதங்கள் சர்வதேச போட்டிகள் எதுவும் இல்லை. அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுடன் ஜூன் மாதம் 9-ஆம் தேதி சென்னையில் முதல் ஒருநாள், 12ல் பெங்களூருவில் இரண்டாவது ஒருநாள், 14-இல் நாகபுரியில் மூன்றாவது ஒருநாள், 17ல் ராஜ்கோட்டில் நான்காவது ஒருநாள், 19ல் தில்லியில் 5 ஆவது ஒருநாள் ஆட்டங்களில் மோதுகிறது. 

ஜூலை 1 முதல் 5 ஆம் தேதி வரை மான்செஸ்டரில் விடுபட்ட டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் ஆடுகிறது. 7ல் சௌதாம்ப்டனில் முதல் டி20, 9ல் பா்மிங்ஹாமில் இரண்டாவது டி20, 10ல் நாட்டிங்ஹாமில் மூன்றாவது டி20இலும், 12ல் லண்டனில் முதல் ஒருநாள், 14ல் இரண்டாவது ஒருநாள், 17ல் மான்செஸ்டரில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களிலும் இந்தியா மோதுகிறது. 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடுகிறது. ஆசியக் கோப்பை போட்டிக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வங்கதேச சுற்றுப் பயணம் தேதிகளும் முடிவாகவில்லை.

;