games

img

விளையாட்டு - புரோ கபடி லீக் தொடர்

புரோ கபடி லீக் தொடர்

குறுகிய காலத்தில் பிரபலமான புரோ கபடி லீக் தொடரின் 10-ஆவது சீசன் சனியன்று தொடங்கிய நிலையில், தொடக்க ஆட்டங்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டங்கள்

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி வரிசைகள்) ஹாட் ஸ்டார்  ஓடிடி - சந்தா தொகை இருந்தால் மட்டுமே

இரண்டு ஆட்டங்களும் டிரான்ஸ்ஸ்டேடியா மைதானம், அகமதாபாத், குஜராத்

தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா
(8-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

உ.பி. யோதாஸ் - ஹரியானா
(9-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

டிக்கெட் விலை எப்படி?

புரோ கபடி லீக் தொடரின் 10-ஆவது சீசனில் டிக்கெட் ரூ.500 முதல் ரூ.6000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பெவிலியன் பகுதிகளில் உள்ள “ஏ” முதல் “ஜே” பிளாக் வரை ரூ.500 முதல் ரூ.1500 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெவிலியனின் நடுப்பகுதியில் இருந்து ஆட்டத்தை காண போர்ஸ் மோட்டார்ஸ் ஸ்டாண்ட் பகுதியின் டிக்கெட் விலை ரூ.1500-க்கு விற்கப்படுகிறது. மைதானத்தின் பின்புறத்தில் இருந்து அருகில் ஆட்டத்தை காண அமைக்கப்பட்டுள்ள பிளாக் “எல்” பகுதி டிக்கெட் விலை ரூ.3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெவிலியனுக்கு கீழே அதாவது மைதான பிட்ச் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஹாஸ்பிட்டலி பிளாக் டிக்கெட் விலை ரூ.6000 விற்கப்படுகிறது. ஹாஸ்பிட்டலி பிளாக்கில் இருந்து மிக மிக அருகில் போட்டியை கண்டு களிக்கலாம். டிக்கெட்  ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், https://in.bookmyshow.com/ என்ற இணையத்தில் டிக்கெட் வாங்கலாம்.

தமிழ்நாடு ரசிகர்கள் கவனத்திற்கு... 

புரோ கபடி தொடர் முதல்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. டிசம்பர் 22 முதல் 27 வரை 6 நாட்கள் சென்னை எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் விளை யாட்டுப் போன்று புரோ கபடி மைதானங்களில் அதிக இருக்கைகள் கிடையாது. மிக குறைவாகவே இருக்கைகள் இருப்பதால் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்வது நல்லது.

கிரிக்கெட்
இன்று
வங்கதேசம் - நியூஸிலாந்து
(2-ஆவது டெஸ்ட் (டிச.6-10))
நேரம் : காலை 9 மணி
இடம் : டாக்கா, வங்கதேசம்

டிசம்பர் 10
இந்தியா - தென் ஆப்பிரிக்கா
நேரம் : காலை 9:30  மணி
இடம் : டர்பன், தென் ஆப்பிரிக்கா

கனமழை எதிரொலி
சென்னை பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் “பார்முலா 4” கார் பந்தயம் நடைபெற உள்ள தாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தொடருக்கான ஏற்பாடு கள் கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக நடைபெற்று வந்தன. முக்கியமாக தெற்கா சியாவின் முதல் இரவு நேர   ஸ்ட்ரீட் சர்கியூட் (Street circuit) பார்முலா 4 பந்தயம்  என்ற சிறப்புடன் “சென்னை பார்முலா 4 கார் பந்தயம்”  நடைபெறவுள்ள நிலையில்,  கனமழை காரணமாக இந்த கார்  பந்தய தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  “மிக் ஜாம்” புயலால் சென்னை நகரமே மழை நீரால் மிதந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் இதரபணிகளுக்கு ஏதுவாக பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாகவும்,  போட்டி நடத்தப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.