games

img

மகளிர் கிரிக்கெட்டில் இனி இந்தியா - இங்கி., ஆட்டங்கள் பரபரப்பாக இருக்கும்

கிரிக்கெட் உலகின் ஆடவர் பிரிவில் எலியும் - பூனை யும் என்ற பகைமை பிரிவு மிகப்பெரிய அளவில்  உள்ளது. இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரே லியா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, இலங்கை - வங்கதேசம், இங்கிலாந்து - நியூசிலாந்து என இன்னும் நிறைய அணிகள் விளையாட்டில் கசப்பான அனுபவத்துடன் மோதல் போக்கு டன் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியையும் எதிர்கொள்ளும்.  ஆடவர் கிரிக்கெட் போல் மகளிர் கிரிக்கெட்டில் எலியும் - பூனையும் பிரச்சனை அவ்வளவாக கிடையாது. காரணம் “பொறுமைக்கு புகழ்பெற்றவர்கள் பெண்கள்” என்பதால் மகளிர் கிரிக்கெட்டில் பெரியளவு மோதல் கிடை யாது. ஆனால் இந்த நடப்பு வாரத்தில் நிகழ்ந்த மன்கட் பிரச்ச னையால் இனி வரும் ஆட்டங்களில் இந்தியா - இங்கிலாந்து  அணிகள் எலியும் - பூனையுமாக தான் களத்தில் மோதிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் மன்கட் செய்யப்பட்ட இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன்  களத்திலேயே அழுதுவிட்டார். சார்லி அழுத விவகாரம் இங்கிலாந்து வீராங்கனைகள் மற்றும் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக விளையாட்டு தொடர்பான தளங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதனால் இனி வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளின்  ஒவ்வொரு ஆட்டமும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

;