games

img

விளையாட்டு...

அமெரிக்க கிளப் அணிக்கு தாவும் மெஸ்ஸி

கால்பந்து உலகின் நட்சத் திர வீரரும், அர்ஜெண்டி னா அணியின் கேப்டனுமான லயோ னல் மெஸ்ஸி பிரான்ஸ் கிளப் அணி யான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வந்தார். அண்மையில் பிஎஸ்ஜி நிர்வா கத்தின் அனுமதியின்றி சவூதிஅரேபியா வுக்கு சென்று வந்த நிலையில்,  பிஎஸ்ஜி  நிர்வாகத்துடன் லேசான அளவில் மோதல் போக்கு ஏற்பட்டதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டன. மேலும் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கு (லா லிகா - ஸ்பெயின்) திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், சவூதி அரேபியா வின் கிளப் அணியான அல் ஹிலால் கால்பந்து அணி 400 மில்லியன் டாலர் (ரூ.3000 கோடி - தோராயமாக) ஒப்பந்தம் மூலம் மெஸ்ஸியை அழைத்தது. ஆனால் மெஸ்ஸி அல்  ஹிலால் செல்ல மறுத்து அமெரிக்கா வின் நட்சத்திர கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இண்டர் மியாமி அணி மெஸ்ஸிக்கு 40 மில்லியன் டாலர் (ரூ.300 கோடி) சம்பளமாக தர உள்ளதாக வெளியாகியுள்ளது.  மெஸ்ஸிக்கு குவியும் பாராட்டு ரூ.4000 கோடிக்கு அதிகமான சம்பளத்துடன் ரொனால்டோவை இழுத்தது போல மெஸ்ஸியையும் இழுக்க சவூதி அரேபிய கிளப்  அணிகள் மிக தீவிரமாக களமிறங்கி யது. சவூதி அரேபிய கிளப் அணி யான அல் ஹிலால் கால்பந்து அணி  400 மில்லியன் டாலர் (ரூ.3000 கோடி  - தோராயமாக) ஒப்பந்தம் மூலம் மெஸ்ஸியை அழைத்தது. பண விவகாரத்தை மட்டுமே அதிகம் பேசியதால் மெஸ்ஸி அங்கு செல்ல மறுத்து கால்பந்து உலகில் பெரி யளவு அறியப்படாத இன்டர் மியாமி அணிக்கு வெறும் ரூ.300 கோடி செல்வ தாக அறிவித்தது கால்பந்து பலத்த பாராட்டை பெற்றுள்ளது. ஆனால் மெஸ்ஸி ஏன் திடீரென அமெரிக்கா பக்கம் சென்றார் என்பது மட்டும் இன்னும் புரியவில்லை.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்
இந்திய ஜோடிகள் அடுத்தடுத்து வெளியேற்றம்

ஆசியக்கண்டத்தின் முக்கிய பேட்மிண்டன் தொடர்களில் ஒன் றான சிங்கப்பூர் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராங்கி  - சிராக் ஜோடி ஜப்பானின் அகிரா கோகா-தாய்ச்சி சாய்டோ ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த  ஆட்டத்தில் ஜப்பான் ஜோடி 21-18 - 14-21, 21-18 என்ற ஜோடி கணக்கில்  இந்திய ஜோடி வீழ்த்தியது. பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ராங்கி  - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறியது.  மகளிர் பிரிவிலும் அதிர்ச்சி மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா வின் ஜாலி திரிஷா- காயத்ரி கோபிசந்த் ஜோடி 14-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் யங் நிகா டிங்- யங் புய் லாம் இணையிடம் போராடி வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்திய பந்துவீச்சாளர்கள் சொதப்பல்
2-வது நாளின் முதல் சீசனிலேயே 400 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்ட னில் நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் சொதப்பலான பந்துவீச்சால் முதல்நாளில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாளில் பந்துவீச்சை மாற்றாமல் ஷார்ட் ஸ்விங்கிலேயே பந்துவீசியதன் விளை வாக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளை போல ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தியது. அனுபவ வீரர் ஸ்மித் (121), டிராவிஸ் ஹெட் (163)  ஆகியோரின் அதிரடியால் 2 நாளின் முதல் சீசனிலேயே 400 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய அணி வலுவான அடித்தளம் அமைத்தது. 

;