games

img

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு குவியும் பாராட்டு

கிரிக்கெட் விளையாட்டில் வீரர் களுக்கு தான் அதிக சம்பளம், படிகள், பரிசுகள், ஸ்பான்சர் என அனைத் தும் தாராளமாக வழங்கப்படுகின்றன. வீரர்களை ஒப்பிடுகையில் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் வீராங்கனை களுக்கு பாதி கூட கிடைக்காது. இதில் படிகள்,  ஸ்பான்சர் சம்பளங்கள் போன்ற வைகளை வீராங்கனைகள் நினைத்து கூட பார்க்க முடியாது. புரியும் படி சொன் னால் வீராங்கனைகளின் சம்பள விகிதம் ஒரு உதிரி தொகை போன்று தான்.  இதனால் கிரிக்கெட் விளையாட்டில் பாலின பாகுபாடு அதிகம் உள்ளது  என்ற  குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்து வரும் நிலை யில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆரம்ப நிலையை உருவாக்கியுள்ளது.  நியூசிலாந்து நாட்டின் தேசிய அணிக் காக விளையாடும் வீரர், வீராங்கனை களுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறி வித்துள்ளது. அதன்படி டெஸ்ட் ஆட்டங் களில் விளையாடும் நியூசிலாந்து ஆடவர்,  மகளிர் அணியினருக்குத் தலா ரூ. 5  லட்சமும் (10,250 நியூசி. டாலர்) ஒருநாள் கிரிக்கெட்டுக்குத் தலா 1.95 லட்சமும் (4,000 நியூசி. டாலர்) டி-20 கிரிக்கெட்டுக்குத் தலா 1.22 லட்சமும் (2,500 நியூசி. டாலர்) வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதே நிலையை அனைத்து நாடுகளும் பின்பற்றி னால் கிரிக்கெட் உலகில் பாலின சமத்துவம் தழைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு தழைத்தால் பாலின சமத்துவத்தில் விளையாட்டு உலகிற்கு கிரிக்கெட் ஒரு  முன்மாதிரியாக மாறும். விளையாட்டு உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பின ரும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத் திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வரு கின்றனர்.

இந்தியாவில் பாலின சம்பள விகிதம் படுமோசம்

இந்தியாவில் கிரேடு அடிப்படையில் தான் சம்பளம். இந்த கிரேடு லிஸ்டின் படி ஆடவர் அணியினருக்கு கூட ஒரே மாதிரி சம்பளம் கிடையாது. மகளிர் கிரிக்கெட் அணியின் சம்பள விகிதம் படுமோசமானது. 

ஆடவர் (ஆண்டு சம்பளம்)
கிரேடு A + : ரூ. 7 கோடி
கிரேடு  A  : ரூ. 5 கோடி
கிரேடு  B : ரூ. 3 கோடி
கிரேடு C : ரூ.1 கோடி 
மகளிர் (ஆண்டு சம்பளம்)
கிரேடு A+ : ரூ. 50 லட்சம்
கிரேடு  B : ரூ. 30 லட்சம்
கிரேடு C :  ரூ.10 லட்சம்

;