games

img

விளையாட்டு...

1500 மீ ஓட்டப்பந்தயம்

உலக சாதனை படைத்த கென்ய வீராங்கனை

இத்தாலி நாட்டின் புளோ ரன்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாவது டயமண்ட் லீக் தடகள தொடரின் மகளிர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கென்யாவின் பெய்த் கிபி யேகோன் பந்தய தூரத்தை 3:49.11 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். 1,500 மீட்டர் ஓட்டப்பந்த யத்தில் எத்தியோப்பியாவின் ஜென்செப் டிபாபாவின் 3:50.07 வினாடிகளில் கடந்ததே முந்தைய சாதனையாக இருந் தது. இச்சாதனையை 8 ஆண் டுகள் போராடி தகர்த்துள் ளார் பெய்த் கிபியேகோன். 29 வயதாகும் பெய்த்கிபியே கோன் இரண்டு ஒலிம்பிக் 1,500 மீ தங்கங்கள் மற்றும் 2017 மற்றும் 2022 உலக சாம் பியன்ஷிப் பட்டங்கள், 2014 முதல் காமன்வெல்த் விளை யாட்டு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று டயமண்ட் லீக் பட்டங் கள் ஆகியவற்றை வென் றுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஐபிஎல் தொடர் போல தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் மட்டும் பங்கேற்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 7-வது சீசன் வரும் ஜூன் 12இல் தொடங்கி ஜூலை 12 வரை கோவை, திண்டுக்கல் சேலம் திரு நெல்வேலி ஆகிய நான்கு நகரங்க ளில் நடைபெறுகிறது.  இந்நிலையில் இந்த டிஎன்பிஎல் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை சனியன்று தொ டங்கியது. ஒரு ஆட்டத்தின் டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் விலையை பொறுத்தே நேரடி டிக்கெட் விற்பனை தொடங்கும் என டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிஎன்பி எல் ஆன்லைன் டிக்கெட் www.insider.in,paytm என்ற இணையத்தில் பெறலாம்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்

அதிரடி வீராங்கனை ரைபகினா திடீரென விலகல்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன் றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 92-வது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடை பெற்று வருகிறது.  இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் கடந்த ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், நடப்பு ஆண்டில் பல முக்கிய டபிள்யுடிபி (WTP) தொடர்களில் பட்டம் வென்றவருமான கஜகஸ்தானின் ரைபகினா உடல்நிலைக் குறைவு காரண மாக விலகினார். அவரை எதிர்த்து போட்டி யிட இருந்த ஸ்பெயின் வீராங்கனை சாரா அதிர்ஷ்ட வாய்ப்புடன் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

வெயில் காரணமா?

தற்போதய நிலையில் பிரான்ஸ் நாட்டில் மழைக்கான சூழ்நிலை உள்ளது.  பெரியளவில் வெயில் அடிக்கவில்லை. 25 டிகிரிக்கு குறைவாகவே வெப்பம் உள்ளது. இதனால் ரைபகினாவின் உடல்நிலை குறைவுக்கு வெயில் காரணமல்ல. செவ்வாய் முதல் பிரான்ஸ் நாட்டில் தீவிர மழைக்கான வாய்ப்பு உள்ள நிலையில், இதனால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆட்டங்கள் பாதிக்க வாய்ப்புள் ளது.

இன்னும் 3 நாட்கள்...

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா
நாள் : ஜூன் 7 முதல் 11 வரை
இடம் : லார்ட்ஸ் மைதானம், லண்டன், இங்கிலாந்து
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்
 

 

;