சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் காஷ்மீரைச் சேர்ந்த 22 வயதான இளஞ்சிங்கம் தனது முரட்டுத்தனமான வேகப்பந்துவீச்சால் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரை மிரட்டி வரு கிறது. அவரை கண்டாலே ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகள் மிரள்கின்றன. இதற்கு காரணம் சராசரியாக 150கிமீ வேகத்தில் பந்துவீசுவதால் தான். அதிக பட்சமாக குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 153.3 கிமீ வேகத்தில் வீசி மிரட்டினார். கடந்த 17-ஆம் தேதி பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் சாதனை, மெய்டன் என 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தார். நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளுடன் அதிக விக் கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் டாப் 10-இல் உள்ளார். ஐபிஎல் தொடர் இன்னும் பாதிக்கட்டத்தை கூட நெருங்கவில்லை அதற்குள் அடுக்கடுக்கான சாதனைகளுடன் மிரட்டி வருகிறார்.
அனுபவம் இல்லாத மிரட்டல்
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக்கிற்கு (22) சர்வதேச அனுபவம் கிடையாது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக சையது முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பை தொடர்களில் பங்கேற் றுள்ளார். பெரியளவில் சாதிக்கவில்லை. ஆனால் இவரது சூப்பர் பாஸ்ட் பந்துவீச்சு திறனை கண்ட ஹைதராபாத் அணி இவரை கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் எடுத்துக் கொண்டது. போதிய அனுபவம் இல்லை என்றாலும், தனது மிரட்டல் குணத்தை வெளிப் படுத்தி ஹைதராபாத் அணி தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்காமல் கவனமாக பார்த்துக்கொண்ட உம்ரான் மாலிக், 8 போட்டிகளில் 11 விக்கெட்டு களை வீழ்த்தி அசத்தினார். இதனால் நடப்பு சீசனில் ஹைதராபாத் அணி தக்கவைத்து கொண்டதற்கான ஒரு காரணம் ஆகும்.
ஓடிவருவதை பார்த்தாலே பயம்...
கடந்த சீசனை விட நடப்பு சீசனில் உம்ரானின் பந்துவீச்சு திறன் மாறுபட்டுள் ளது. அதாவது அவரது பந்துவீச்சின் வேக திறன் மிகவேகமாக மாறியுள்ளது. அவர் வீசும் பந்துகள் பெரும்பாலும் 145 கிமீ மேல் தான் உள்ளது. 6 பந்துகளையும் ஒரே மாதிரியாக வீசாமல் மாற்றி மாற்றி வீசி வருவதால் ஐபிஎல் பேட்டர்கள் திணறுகின்றனர். முக்கியமாக இவர் ஓடி வருவதை பார்த்தாலே பேட்டர்கள் ஒருவித தயக்கத்து டன் தான் அவரது பந்துவீச்சை எதிர்கொள் கின்றனர். அந்தளவுக்கு ஐபிஎல் தொடரையே மிரட்டி வருகிறார் இந்த காஷ்மீர் எக்ஸ்பிரஸ். கிரிக்கெட் உலகின் பிரபல வேகபந்துவீச்சா ளர் வாக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) ஸ்டைலில் பந்துவீசி வரும் உம்ரான் மாலிக் பார்ம் மற்றும் மனம் தொடர்பான சிக்கலை சமாளித்தால் இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால தலைமுறைக்கு ஒரு உன்னத வேகப்பந்துவீச்சாளர் தயார் என்று கூட சொல்லலாம்.
இன்றைய ஆட்டங்கள்
சந்தோஷ் கோப்பை கால்பந்து
குஜராத் - மணிப்பூர்
நேரம் : மாலை 4 மணி
கர்நாடகா - சர்வீசஸ்
நேரம் : இரவு 8 மணி
2 ஆட்டங்களும் கேரள மாநிலம்
மலபுறத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது
ஐபிஎல்
சென்னை - மும்பை
இடம் : பாட்டில் மைதானம், மும்பை
நேரம்:இரவு 7:30மணி