games

img

விளையாட்டு

வில்வித்தை உலகக்கோப்பைபதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா சாதனை

வில்வித்தை உலகக்கோப்பை போட்டி சீனாவில் நடைபெற்று வந்தது. மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய வீராங்கனையான ஜோதி சுரேகா வென்னம் கலந்து கொண்டார். பரபரப்பான இந்த போட்டியில் பிரிட்டன் வீராங்கனையை  வீழ்த்தி இந்திய வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது அவரது முதல் உலகக்கோப்பை பதக்கமாகும். இதன்மூலம் உலகக்கோப்பையில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறையும் அவர் படைத்துள்ளார். ஜோதி இதற்கு முன் 2022 (Tlaxcala) மற்றும் 2023 (Hermosillo) இறுதிப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் கொடூரம் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

கடந்த ஒரு வாரமாக பாகிஸ் தான்- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் களும், தாக்குதல்களும் நடந்து வரு கின்றன. இதில் 2 நாடுகளிலும் பாதிப்பும், உயிர்ச்சேதமும் ஏற் பட்டுள்ளன. இதனால் இரு நாடு களுக்கிடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடு களும் முன்வர வேண்டும் எனக் கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருக் கிறது பாகிஸ்தான். பாக்டிகா மாகா ணத்தின் அர்குன் மற்றும் பர்மல்  மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்கு தலில் 10 பேர் உயிரிழந்திருக்கின்ற னர், 12 பேர் பலத்த காயம் அடைந் திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 10 பேரில் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என மூன்று ஆப்கானிஸ் தான் கிரிக்கெட் வீரர்களும் உயிரி ழந்துள்ளனர்.  விலகல் இந்நிலையில், இந்தப் பயங்கர சம்பவத்துக்கு எதிர்ப்பாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் நடைபெறவிருந்த டி-20 முத்தரப்பு நேஷன் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறி வித்துள்ளது. இந்தச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : இன்றைய ஆட்டம் இந்தியா - இங்கிலாந்து இடம் : இந்தூர், ம.பி., நேரம் : மதியம் 3:00 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக டேவிட் சாகர்

ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் சாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், ஆஷஸ் கோப்பைத் தக்கவைக்க இரு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பயிற்சி ஆலோசகராக நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுத்தி  நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சர்வதேச லெஜண்ட்ஸ் லீக்கில் விளையாடவிருப்பதால், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் சாகர் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.