games

img

விளையாட்டு செய்திகள்

மரபுகளை மீறி உலகக்கோப்பையை உயர்த்திப் பிடித்து கொண்டாடிய ஜெய் ஷா 
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இரண்டாவது முறை யாக மீண்டும் டி-20 உலகக்கோப்பை யை வென்றுள்ள நிலையில், கோப்பை வழங்கும் நிகழ்விற்கு சிறப்பு விருந்தி னராக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா சென்றிருந்தார். ஜெய் ஷாவிற்கு சிறப்பு விருந்தினர் பொறுப்பு ஐசிசியின் முடிவு படியா? இல்லை, ஜெய் ஷாவின் கோரிக்கையா? எனத் தெரியவில்லை. 

ஆனால் ஜெய் ஷாவே இந்திய அணியிடம் உலகக்கோப்பையை வழங்கினார். ஆனால் இந்நிகழ்வில் மரபுபடி செயல்படாமல் ஜெய் ஷா தனது பொறுப்பை மறந்து இந்திய வீரர் களுடன் உலகக்கோப்பையை உயர்த்திப் பிடித்தும், மைதானத்தில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

ஜெய் ஷாவும்... சர்ச்சையும்...

1. உலகக்கோப்பையை வீரர்களிடம் கொடுத்தவுடன் மேடையை விட்டு கீழே இறங்குவது மரபு. ஆனால் ஜெய் ஷா இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிடம் உலகக்கோப்பையை கொடுத்து, அவருடன் ஜெய் ஷாவும்கோப்பையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தார். இதுவரை அரங்கேறாத மிகப்பெரிய சர்ச்சை சம்பவத்தை ஜெய் ஷா செய்துள்ளார்.

2. உலகக்கோப்பையை வாங்க வரும் பொழுது ரோகித் சர்மா நடனம் ஆடிக் கொண்டு வந்தார். அவர் ஒரு வீரர் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கோப்பை கொடுக்க விருந்தாளியான ஜெய் ஷாவும்நடனம் ஆடி கோப்பையை கொடுத்தார். ஒருநாட்டின் கிரிக்கெட் வாரிய செயலாளராக இருக்கும் ஜெய்ஷா இப்படி செய்துள்ளது மிகவும் மோசமான சம்பவம் ஆகும். 

3. உலகக்கோப்பையை பெற்றவுடன் இந்திய வீரர்கள் மைதான ரவுண்ட்ஸ் மூலம் ரசிகர்களிடம் வாழ்த்துபெற்றனர். இந்த மைதான ரவுண்ட்ஸில்ஜெய் ஷாவிற்கு என்ன வேலை? அவர் என்ன வீரரா? அவரும் மைதானத்தில் ரவுண்ட்ஸ் மேற்கொண்டதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பிய கோப்பை கால்பந்து - 2024 
காலிறுதியில் ஸ்பெயின்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐரோப்பிய கால்பந்து தொடரில் (யூரோ) தற்போது நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. திங்களன்று நடைபெற்ற 4ஆவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜார்ஜியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜார்ஜியா அணி 18 ஆவது  நிமிடத்திலேயே கோலடித்து தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும், ஸ்பெயின் அணி 30ஆவது நிமிடத்திற்கு மேல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதன் பலனால் அந்த அணி அடுத்தடுத்து 4 கோலடித்து அசத்திய நிலையில், ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

இன்றைய ஆட்டங்கள்

ருமேனியா - நெதர்லாந்து
இடம் : மூனிச், ஜெர்மனி
நேரம் : இரவு 9:30 மணி

ஆஸ்திரியா - துருக்கி
இடம் : சக்ஸோனி, ஜெர்மனி
நேரம் : நள்ளிரவு 9:30 மணி

சேனல்: சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஒடிடி)

 

;