games

img

புரோ கபடி லீக் - இன்று தொடக்கம்

புரோ கபடி லீக் 

கபடி விளையாட்டை இந்தியாவில் மேலும் சுவாரஸ்யப்படுத்த ஐபிஎல் (கிரிக்கெட்) பாணியில் புரோ கபடி என்ற பெயரில் லீக் தொடர் 2014இல் துவங்கப்பட்டது.  இந்த தொடரில் இதுவரை 9 சீசன் நிறைவு பெற்ற நிலையில், 10-ஆவது சீசன் சனியன்று தொடங்குகிறது. வீரர்கள் தேர்வு ஏலத்தின் மூலம் நடைபெற்ற நிலையில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் 12 மைதானங்களில் நடைபெறுகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறும்.

இன்றைய ஆட்டங்கள்

இரண்டு ஆட்டங்களும் டிரான்ஸ்ஸ்டேடியா மைதானம், அகமதாபாத், குஜராத்

தெலுங்கானா - குஜராத்
நேரம் : இரவு 8 மணி

மும்பை - உத்தரப்பிரதேசம்
நேரம் : இரவு 9 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி வரிசைகள்) 
ஹாட் ஸ்டார்  ஓடிடி - சந்தா தொகை இருந்தால் மட்டுமே

அணிகள் - 12 
(மாநிலப் பிரிவு) 

1. தமிழ் தலைவாஸ் - தமிழ்நாடு
2. பெங்களூரு புல்ஸ் - கர்நாடகா
3. பெங்கால் வாரியர்ஸ் - மேற்கு வங்கம்
4. தெலுங்கு டைட்டன்ஸ் - தெலுங்கானா
5. ஹரியானா ஸ்டீலர்ஸ் - ஹரியானா
6. பாட்னா பைரட்ஸ் - பீகார்
7. புனேரி பால்டன் - மகாராஷ்டிரா
8. யு மும்பா -  மகாராஷ்டிரா
9. யு.பி. யோதாஸ் - உத்தரப்பிரதேசம்
10. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - ராஜஸ்தான்
11. குஜராத் ஜெயன்ட்ஸ் - குஜராத்
12. தபாங் தில்லி - புதுதில்லி

சென்னையிலும் ஆட்டம்
 

புரோ கபடி லீக் தொடர் பெரும்பாலும் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி பகுதிகளில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல்முறை யாக தமிழ்நாடு தலை நகர் சென்னையில் நடை பெறுகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் டிசம்பர் 22 முதல் லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. சென்னையில் முதல்முறையாக புரோ கபடி ஆட்டங்கள் நடைபெறுவதால் தமிழ்நாடு ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

நட்சத்திர வீரர்களும்... அணிகளும்...

நரேந்தர் - தமிழ்நாடு
பவன் ஷெராவத் - தெலுங்கானா
பிரதீப் நார்வல் - உத்தரப்பிரதேசம்  
மணிந்தர் சிங் - பெங்கால்  
பரத் - பெங்களூரு  
நவீன் - தில்லி
பசெல் - குஜராத்
சித்தார்த் தேசாய் - ஹரியானா
ராகுல் சவுதாரி - ஜெய்ப்பூர்
மன்ஜீத் - பாட்னா
மோஹித் - புனே
குமான் சிங் - மும்பை