games

img

ஐபிஎல் 2021 - புழுதி புயலையும் பொருட்படுத்தாமல் தோனி, விராட்  உரையாடிய வீடியோ வைரல்

இந்திய அணியின் முன்னாள், இந்நாள் கேப்டன்களான தோனியும், விராட் கோலியும் கட்டிப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

14வது ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணியைச் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை உறுதி செய்துள்ளதால் சென்னை ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியின் முடிவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, இந்நாள் கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், புழுதி புயல் காரணமாகச் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் போடத் தாமதமான நிலையிலும் அதனைப் பொருட்படுத்தாமல் தோனி மற்றும் விராட் கோலி மகிழ்ச்சியுடன் உரையாடிய காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

;