games

img

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று 2-வது ஒருநாள் போட்டி

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது ஒருநாள் போட்டி வியாழனன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெறுகிறது.  தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் 2-வது ஒருநாள் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மழை வருமா?

போட்டி நடைபெறும் தினத்தின் வானிலை அறிவிப்பின் படி மழை வருவதற்கான சூழ்நிலை இல்லை என்றாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாறுபட்ட காலநிலையால் 30% லேசாக மழை வர வாய்ப்புள்ளது.

இந்தியா - இங்கிலாந்து 
இடம் : லார்ட்ஸ் மைதானம், லண்டன்
நேரம் : மாலை 5:30 மணி